பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

箕6垒 தமிழ் நூல் அறிமுகம்

இல்லற வாழ்வுக்கு நல்ல மனைவி இன்றியமை யாதவள்.மனைவி நற்பண்பை உடையவள் அல்லளானால் வாழ்வே துன்பம் நிறைந்ததாகி விடும். எத்தகைய பெண்டிர் இன்னாமையைத் தருபவர் என்பதைச் சில இடங்களில் கூறுகிறார். -

ஒட்டுறவு இல்லாத மனைவி எவ்வளவு அழகுடைய வளாக இருந்தாலும் நன்மை இல்லை (1): கட்டிக் கொண்ட மனைவி தனக்கு அடங்காதவளாக இருந்தால் துன்பந்தான் (2); தன்னுடைய எண்ணங்களோடு ஒத்து வராத மனைவியோடு இணைதல் இன்பத்தைத் தராது (11); உறுப்புவளம் இல்லாத பெண்ணை விரும்புவதில் இன்பம் இல்லை (12); வஞ்சிக்கும் பெண்களால் இன்னலே விளையும் (14). பிறன் மனையாளை விரும்புவதனால் துன்பமே உண்டாகும் (38.) -

அக்காலத்தில் கோனாட்சியே சிறந்திருந்தது. மன்னன் நற்குண நற்செய்கைகளோடு இருந்து செங்கோலோச்ச வேண்டும். மன்னர்கள் இன்னபடி இருக்கக் கூடாது. என்பதை இந்நூலில் அங்கங்கே காணலாம். -

தன் நாட்டில் வாழும் மக்களுக்குப் பசி, பிணி, பகை அணுகாமல் காப்பாற்ற வேண்டியது மன்னன் கடமை. அவ்வாறு காவல் புரியாவிட்டால் அந்த மன்னனால், தீங்கே உண்டாகும். இதை, -

- * இன்னா காப்பு ஆற்ற வேந்தன் உலகு (2)

என்று புலப்படுத்துகிறார். கொடுங்கோல் மன்னன் நாட்டில் வாழ்வது துன்பத்தைத்தான் தரும் என்பதை,

கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்தல் இன்னா