பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. இன்னா நாற்பது 165

என்று தெரிவிக்கிறார். தீங்கு செய்வாரைத் தண்டிப்பதை முறை செய்தல் என்று கூறுவர். முறை செய்யாத மன்னன் நாட்டில் குற்றம் புரிபவர்கள் மிகுதியாகி விடுவார்கள். அத்தகைய அரசு இன்னாமையை உண்டாக்கும்.

"முறைஇன்றி ஆளும் அரசு இன்னா'

என்று இந்தக் கருத்தைக் கூறுகிறார்.

வணங்கா முடியனாக இருக்கும் ஓர் அரசன் பணிந்து அணுகுகிறான் என்றால் அது நல்லதற்கு அடையாளம் அன்று. ஏதோ ஆபத்துப் பின்னால் வரப்போகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

'பணியாத மன்னர் பணிவுஇன்னா (18) என்பது இந்தக் கருத்தையே குறிப்பாகச் சொல்கிறது

வீரமில்லாத வேந்தன்.போர் செய்யப் புகுந்தால் என்ன ஆகும் இன்னலே உண்டாகும்.

மறம் இலா மன்னர் செருப்புகுதல் இன்னா'

என்பதில் அந்தக் கருத்தை வைத்திருக்கிறார்.

கவிஞர்கள் தம் கவிகளைச் சுவைப்பவர்களிடம்

சொல்ல வேண்டும், ரசிகர்கள் அல்லாதவரிடம் சொல்லிப் பயன் இல்லை. இதை,

பொருள் உணர்வார் இல்வழிப் பாட்டுரைத்தல் இன்னா' என்று • றுகிறார். சங்ககாலத்தில் புலாலுணவைப் பற்றிய வருணனைகள் வரும். புலாலுணவை வில்க்க வேண்டும் என்று திருவள்ளுவர் வற்புறுத்துகிறார். இந்த துலாசிரியரும். : - .

த-11