பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f66 தழிழ் நூல் அறிமுகம்

"ஊனைத்தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா' என்று சொல்கிறார். -

வேடிக்கையான கருத்துக்கள் சிலவற்றை இடை யிடையே காணலாம். கள்ளைக் குடித்து ஆட்டம் போடு கிறவர்களுக்குக் கள் இல்லாத ஊர் பிடிக்காதாம்; 'கள் இல்லா மூதூர் களிகட்கு நற்குஇன்னா' (9). வீரம் உடையவன் நிமிர்ந்த மார்புடன் இருக்க வேண்டும்; அவன் எதற்குத் தன் மார் பை ஆடையால் போர்த்துக் கொள்கிறான்? அது நல்லதன்று' என்கிறார் ஓரிடத்தில்; 'மறன் உடையான் ஆடையால் மார்பு ஆர்த்தல் இன்னா' (18), குயில் வசந்த காலத்தில் கூவினால் இனிமையாக இருக்கும். மழைக் காலத்தில் கூவினால் கேட்கச் சகிக்காது; "மாரிநாள் கூவும் குயிலின் குரல் இன்னா (20). பாக்கை மெல்லும் போது கடுக்கென்று கல்லைக் கடித்தால் நன்றாக இருக்காது; "கடித்தமைந்த பாக்கினுள் கற்படுதல் இன்னா (39).

மணிகட்டாத குதிரையிலும் யானையின் மேலும் ஏறிப் போகக் கூடாது; போனால் வழியில் போவோருக் குத் துன்பம் நேரும் (18, 15); சேணம் முதலியவை போடாமல் குதிரை ஏறக்கூடாது (8, 88); குதிரை ஏற்றம் பழகாமல் குதிரை மீது சவாரி செய்யக்கூடாது (23). இப்படி உபயோகமுள்ள யோசனைகளும் இந்த நீதி நூலில் அடங்கியுள்ளன. * . .

இவ்வாறு பல கருத்துக்களை இன்னா' என்று வாக்கியங்களால் புலப்படுத்தும் இந்த நீதி நூல் எல்லாத் துறைகளிலும் உள்ளவற்றை விரிவாகச் சொல்லவில்லை; என்றாலும் சொன்ன அளவில் தெளிவாகவும் சுருக்க மாகவும் நீதிகளைத் தெரிவிக்கிறது. .