பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. இனியவை நாற்பது

இன்னா நாற்பதைப் போல, இவை இனியை

என்று நாற்பது செய்யுட்களில் சொல்வதால் இனியவை நாற்பது என்ற பெயர் இந்த நூலுக்கு ஏற்பட்டது. இதை இனியது நாற்பது இனிது நாற்பது, இனிய நாற்பது என்று வேறு வகையாகவும் வழங்குவது உண் டென்று தெரிகிறது. இதனை இயற்றியவர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார். மதுரையில் தமிழாசிரியராக இருந்த பூதன் என்பவருடைய புதல்வ ராகிய சேந்தனார் என்று கொள்ள வேண்டும்.

கடவுள் வாழ்த்து ஒன்றும் நீதிகளைச் சொல்லும் நாற்பது பாடல்களுமாக மொத்தம் 41 பாடல்களை உடையது இந்த நூல். 8-ஆவது பாடல் ஐந்து அடிகளை யுடைய பஃறொடை வெண்பா மற்றவை யாவும் நான் கடிகளை உடைய இன்னிசை வெண்பாக்கள்.

நான்கு பாடல்களில் (1,3,4,5) நான்கு நீதிகளும்,

மற்றப் பாடல்களில் மூன்று நீதிகளும் உள்ளளன. இன்னா

நாற்பது போன்ற செறிவு இந்த நூலில் உள்ள வெண் பாக்களுக்கு இல்லை.

கடவுள் வாழ்த்தில் முதலில் சிவபெருமானையும்,

பிறகு திருமாலையும், அப்பால் நான்முகனையும் போற்று.