பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 தமிழ் நூல் அறிமுகம்

கிறார் புலவர். நான்முகனுக்கு வணக்கம் சொல்லுதல் அருமையாகவே பிற நூல்களில் காணப்படும்.

'கண்மூன்று உடையான் தாள் சேர்தல் கடிது இனிதே; தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழல் இனிதே; முந்துறப் பேணி முகம்நான்கு உடையானைச் சென்று அமர்ந்து ஏத்தல் இனிது.”

முன் இரண்டடியில் உள்ள செறிவு பின் இரண்டடி யில் இல்லை. முகம் நான் குடையானை ஏத்தல் இனிது" என்று சொன்னால் போதும்; அடிகள் நிரம்புவதற்காக வார்த்தைகளை மேலும் அடுக்கியிருக்கிறார் புலவர்.

நட்பைப் பற்றியும் கல்வியைப்பற்றியும் கூறும் கருத்துக்கள் இந்த நூலில் மிகுதியாக உள்ளன. அடுத்த படி ஈகையைப் பற்றிய கருத்துக்கள் வருகின்றன. மன்னரைப் பற்றியும் பெண்களைப் பற்றியும் சில கருத்துக்கள உள்ளன. -

மிகவும் உத்தமமானவர்களுடன் சேர்தல் இனிமை யைப் பயக்கும் என்பார் இவ்வாசிரியர்.

"ஆங்கினிதே

தெற்றவும் மேலாயார்ச் சேர்வு."

எங்கே சென்றாலும் அங்கே நண்பர்கள் இருந்தால் நன்மை உண்டாகும்; மயக்கம் இல்லாத மாட்சிமைப் பட்டவர்களைச் சேரும் பாக்கியம் கிடைத்து மாறாமல் இருந்தால் இனிது (12); தம்மைவிட மிக்க பெருமை உடையவரைச் சேர்தல் மிக்க மாட்சியைத் தரும் (16): நண்பர்களுக்கு நன்மை செய்வது இனிது (17); நண்பர் களைப் பற்றிப் புறங்கூறாமல் வாழ்தல் மிகவும் இனிது (19); தன்னை விரும்பி வந்து சேர்ந்தாருடைய விருப் பத்தை மறுக்காமல் இருப்பது இன்து (26), நல்ல