பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. இனியவை நாற்பது 169

நண்பர்களை உடையவன் படை ஆண்மை இனிதாக இருக்கும் (38); மனத்தில் மாட்சி யில்லாதவரை அஞ்சி நீங்க வேண்டும் (10); வஞ்ச முடையவரோடு சேர்தல் கூடாது (20); மயக்கம் உடையவர்களோடு மறந்தும் சேராமல் வாழ்தல் வேண்டும் (21); எவ்வளவு பொருள் பெற்றாலும் கல்லாதவர்களை விட்டு அகலுதல் நல்லது (23); நல்ல அறிவும் ஒழுக்கமும் இல்லாத மனிதரோடு சேருதல் கூடாது (25); இழி குணமுடையவர்களை விட்டு நீங்க வேண்டும் (29); உலகத்தாரால் மதிக்கப் பெற்ாதவர் களுடன் நட்புக் கூடாது (34).

இவை நட்பைப் பற்றிய கருத்துக்கள்.

'பிச்சைபுக் காயினும் கற்றல் மிக இனிதே' (1) "நாளும் வைபோகான் கற்றல் மிக இனிதே' (3) |நவை போகான்-குற்றம் சாராமல்.) 'கற்றார்முன் கல்வி உரைத்தல் மிக இனிதே' (16) "புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே' (20) 'கற்றறிந்தோர் கூறும் கருமப் பொருள் இனிதே' (32) பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய கற்றலிற் காழ்இனிய தில்' (40)

என்பவை கல்வியைப் பற்றி வரும் கருத்துக்கள்.

இந்த நூலின் ஆரம்பத்தில் பிச்சை எடுத்தாவது கற்க வேண்டும் என்றவர், நூலை முடிக்கும் போது, *ஒவ்வொரு நாளும் பற்பல நூல்களைக் குற்றமில்லாமல், பாங்குடையவற்றைக் கற்பதைவிடச் சிறப்பாக இனியது வேறு இல்லை என்று கூறுகிறார். கடன் கொண்டும் செய்வன செய்' என்பது ஒரு பழமொழி; இந்த நூலில் "கடன் கொண்டும் செய்வன செய்தல் இனிதே' (31) என்பதில் அந்தப் பழமொழியை அப்படியே அமைக்கிறார் ஆசிரியர். / ' ・ : .. . .