பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 தமிழ் நூல் அறிமுகம்

சில பாடல்களில் ஒன்றனோடு தொடர்புடைய கருத்துக்களை அடுத்தடுத்துச் சொல்கிறார் ஆசிரியர்.

'மனம் ஒத்திருக்கும்படி முடிந்தால் இல்லற வாழ்க்கை இனியது என்று சொன்னவர் அடுத்தே, மாட்சிமைப் பட்ட வாழ்க்கை அமையா விட்டால் உலக நிலை யாமையை எண்ணி உயர்ந்தவர்கள் துறவை மேற். கொள்ளுவது இனிது’ என்று அதனோடு தொடர்புடைய கருத்தைச் சொல்கிறார். -

'ஒப்ப முடிந்தால் மனைவாழ்க்கை முன் இனிது மாறாதாம் ஆயின் நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல் தலையாகத் தான்.இனிது நன்கு. (2)

"மன்னன் செங்கோல் மாறித் தீயது செய்யாமை இனிது; செங்கோலனாக இருத்தல் இனிது (5) என்பதில் இனமுள்ள இரண்டு கருத்துக்களைத் தொடர்ந்து சொல் கிறார். அப்படியே, 'குழவிதளர் நடை காண்டல் இனிதே' என்றவர் தொடர்ந்து, "அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே' (14) என்கிறார். ஒரே பாட்டில் மன்னனோடு தொடர்புடைய மூன்று கருத்துக்களைச் சேர்த்துச் சொல்கிறார்.

'ஒற்றினான். ஒற்றிப் பொருள் தெரியும் மாண்புஇனிதே;

முன்தான் தெரிந்து முறைசெய்தல் முன்இனிதே; பற்றிலனாய்ப் பல்லுயிர்க்கும் பார்த்துற்றுப் பாங்கறிதல் வெற்றிவேல் வேந்தர்க் கினிது.'" (35) - இன்னா நாற்பதில் வரும் பல கருத்துக்கள் இந்த நூலிலும் வருகின்றன. -

'உடம்பாடு இல்லாத மனைவி தோள் இன்னா' (11) என்பது இன்னா நாற்பது: "ஒப்ப முடிந்தால் மனை