பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. இனியவை நாற்பது 171

வாழ்க்கை முன் இனிது’ (2) என்பது இனியவை நாற்பது. "ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா' (22) என்று இன்னா நாற்பதில் சொன்னதையே, ஊனைத் தின்று ஊனைப் பெருக்காமை முன் இனிதே' (4) என்றார் இந்த ஆசிரியர்.

'இன்னா, மனவறியாளர் தொடர்'(18) என்று இன்னாதவற்றில் அடக்கிக் கூறியதையே, மனமாண் பிலாதவரை அஞ்சி அகறல். எனைமாண்பும் தான் இனிது நன்கு (10) என்று கூறினார், இந்த ஆசிரியர். குழவிகள் உற்ற பிணி இன்னா (35) என்பது இன்னா நாற்பது; குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே'(12) என்பது இனியவை நாற்பது. 'மற மன்னர் தம்கடையுள் மாமலை போல் யானை, மத முழக்கம் கேட்டல் இனிது'(15) என்று இந்த நூலில் வருவது, 'யானையில் மன்னரைக் காண்டல் நனியின்னா'(22) என்று இன்னா நாற்பதி லுள்ளதை விரித்தமைத்தது. பிறன் மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்னா' (38) என்பார் அவர் 1 'பிறன்மனைப் பின்நோக்காப் பீடு இனிது ஆற்ற'(15) என்பார் இவர் இப்படியே இன்னா, கொடும்பா டுடையார்வாய்ச் சொல்'(6), மன்றில் கொடும்பாடு உரையாத மாண்பு இனிதே'(30) என்றும், 'அடைக்கலம் வவ்வுதல் இன்னா'(40), அன்றறிவார் யார் என்று அட்ைக்கலம் வெளவாத், நன்றியின் நன்கினிய தில்'(30) என்றும், 'கல்லார் உரைக்கும் கருமப் பொருள் இன்னா' (15), கற்றறிந்தார் கூறும் கருமப் பொருள் இனிதே'(32) என்றும் 'மான்றிருண்ட போழ்தில் வழங்கல் பெரிதின்னா'(17), எல்லிப் பொழுது வழங்காமை முன்னினிதே'(94) என்றும், "முக்கட் பகவன் அடி தொழா தார்க்கின்னா'(கடவுள்), "கண் மூன்றுடையான்