பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. கார் நாற்பது

பதினெண் கீழ்க்கணக்கு என்னும் வரிசையில் ஆறு அகப்பொருள். நூல்கள் உள்ளன என்று முன்னே பார்த் தோம். அவற்றுள் கார் நாற்பது ஒன்று.நாற்பது செய்யுட் கள் உடைய நூல்கள் பதினேண் கீழ்க்கணக்கில் நான்கு உள்ளன. அவற்றில் இது ஒன்று. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங் கூத்தனார். அவருடைய தந்தையார் பெயர் கண்ணன். அவர் இயற் பெயர் கூத்தனார்.

அகப் பொருளுக்குரிய திணைகள் ஐந்தில் ஒவ்வொன் றிற்கும் பெரும் பொழுது, சிறு பொழுது இன்னவை என்ற வரையறை உண்டு. கார், கூதிர், முன்பணி, பின்பணி, இளவேனில், முதுவேனில் என்ற ஆறு இருதுக் களே பெரும் பொழுதுகள். கார் காலம் முல்லைத் திணைக் குயரிது. அந்தத் திணைக்குரிய ஒழு க் கம் இருத்தல். திருமணம் செய் து கொண்ட காத்லன் பொருள் ஈட்டவோ, ஒதவேர், வேந்தனுக்குத் துணையாகவோ, நாடு காவலுக்காகவோ காதலியைப் பிரிந்து செல்லும் போது, நான் கார் காலத்தில் வந்து விடுவேன்' என்று சொல்லிச் செல்வான். கார் காலம் வந்தவுடன் தலைவன் வருவான் என்ற நம்பிக்கையோடு தலைவி இல்லில் இருப் பாள். இதுதான் இருத்தல் என்னும் ஒழுக்கம்.

கார் காலம் வந்து விட்டது என்றும், அவர் இன்னும் வரவில்லையே என்றும், அவர் சொன்ன பருவம் இதுவே யாதலால் வந்து விடுவார் என்றும் தோழியும் தலைவியும்