பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 தமிழ் நூல் அறிமுகம்

கூறுதலும், தலைவி தனக்காகக் காத்திருப்பாள் என்றும், ஊர் சென்று அவளை அடைய வேண்டும் என்றும், பாகனே தேரை விரைவில் விடுக என்றும் தலைவன் கூறுதலும் இந்தத் திணையில் வரும் பாடல்களில் இருக்கும். தலைவி தலைவன் வரவை எதிர்பார்த் திருப்பதும் தலைவன் தலைவியினிடம் வரமுயல்வதும் ஆகிய இருவகைக்குள் இந்தத் திணையில் உள்ள பாடல் கள் அடங்கும். -

கார் நாற்பதில் இத்தகைய கூற்றுக்களைக்காணலாம். தலைவி, தோழி. தலைவன் ஆகிய மூவரும் கூறும் கூற்றுக் கள் தனித்தனியே உள்ளன.

ஒவ்வொரு திணைக்கும் முதற் பொருள், கருப் பொருள், உரிப்பொருள் என்ற மூன்று உண்டு. நிலமும் பொழுதும் முதற்பொருள். காடும் காட்டைச் சார்ந்த, நிலமும் முல்லை நிலமாகும். கார்ப் பருவம் பெரும் பொழுது: மாலை சிறு பொழுது. இவை முதற் பொருள், முல்லை நிலத்திலுள்ள பறவை, விலங்கு, மரம், மக்கள் முதலியவை கருப்பொருள். முன்னே சொன்ன இருத்தல் என்பதே உரிப்பொருள். -

இந்த நூலில் இந்த மூவகைப் பொருள்களும் அங்கங்கே வந்துள்ளன. கார்காலத்தில் மழை பொழிய, இயற்கை வளம் சிறந்து மலர்கள் மலர்ந்து நிற்றலை இந்த ஆசிரியர் காட்டுகிறார். - . . . ;

மேகங்கள் கடலில் புகுந்து நீரைப் பருகி மலைகளின் மேல் ஏறுகின்றன. வானம் முழுதும் கருநிறம் கொண்டு எங்கும் இருள் செறிந்திருக்கிறது. எல்லாத் திசை களிலும் மேகங்கள் பரந்து மல்குகின்றன, திருமாலினு டைய மார்பில் உள்ள பல வண்ண மலர் மாலையைப் போல இந்திர வில் தோன் றுகிறது. வேள்வித்