பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. கார் நாற்பது 175

தீயைப்போலவும் மன்னர் யானைகளை வெட்ட வீசுகின்ற வாளைப் போலவும் மின்னல் மின்னுகிறது. இடி இடிக் கிற்து. அதன் குரலுக்கு எதிரே காளை மாடுகள் முழங்கு கின்றன. பாம்புகள் அஞ்சி நடுங்குகின்றன. வெற்றி முரசைப் போலவும் முருகப் பெருமானுக்குரிய தொண்டகப் பறையைப் போலவும் இடி இடிக்கிறது.

மழை பொழிகிறது. கூந்தலை விரித்தாற் போல மழைத் தாரைகள் இறங்குகின்றன. மழைத் துளிகள் பெரிது பெரிதாக முல்லை நிலம் முழுவதும் வீழ்கின்றன. மழை பெய்ததனால் எங்கும் குளிர் பரவுகின்றது. வறியவர் மேனியைப் போல வாடி நின்ற காடு செல்வர் மனம் போல வளம் பெறுகிறது. பருவ எழிலைப் பெற்ற பெண்களைப் போலக் காடு அழகு பெறுகிறது. செல்வம் உடையவருடைய பொலிவு போல் எங்கும் மலர்களை உடையதாக விளங்குகிறது. மரங்களெல்லாம் மலர்ந்து மணக்கின்றன. யானை மதம் போன்ற நறுமணம் எங்கும். வீசுகிறது. எங்கே பார்த்தாலும் கம் என்று மணக் கிறது காடு, -

வேனிற் பூவாகிய பாதிரி வாடுகிறது. கொன்றை. மலர் கவின் பெறுகிறது. கருவிளை கண்ணைப் போலப் பூக்கிறது.

செங்காந்தள் பூக்கள் கார்த்திகையன்று ஏற்றிய விளக்கைப் போலத் தோன்றுகின்றன. அவை அடர்த்தி யாகப் பூத்த இடத்தைப் பார்த்தால் நெருப்பின் வனப்புத் தெரிகிறது. காந்தளின் கொத்தைப் பார்த் தால் பாம்பின் தலையைப் போல இருக்கிறது. பெண் களின் கூரிய பற்களைப் போல முல்லை அரும்புகள் அரும்பு கின்றன. குருந்த மரங்களில் கொத்துக் கொத்தாக மலர்கள் மலர்கின்றன. சிவந்த அடியையுடைய கடம்ப மரங்களிலும் மலர்கள் அலர்கின்றன. வரகுப் பொரி