பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 தமிழ் நூல் அறிமுகம்

போலத் தெறுழம் பூவும் பொன்னாற் செய்த குழையைப்

போலக் குமிழம் பூவும், மீன் கொத்திப் பறவை வாயைத் திறந்தாற் போலச் செம்முல்லையும் பூக்கின்றன நண்டின் கண்னைப் போல நொச்சி அரும்புகள் விளங்குகின்றன.

ஒரு பக்கம் பிடாமரம் பூத்திருக்கிறது.

காடு முழுவதும் மலர்கள் பூத்துக் குலுங்கினால் வண்டுகளுக்குக் கொண்டாட்டந்தானே?. அவை மலரில் உள்ள தாதை ஊதிப் பாட்டு பாடுவது போல முரல் கின்றன. என்றும் அழியாத புகழை விரும்பிய செல்வரின் மனம் எப்ப்டி மகிழுமோ அப்படி மகிழ்ந்து வண்டுகள் இசையை இசைக்கின்றன.

கெடாஅப் புகழ்வேட்கைச் செல்வர் 5 னம்போல் படாது மகிழ்வண்டு பாண்முரலும்.'

வசந்த காலத்தில் இன்புறும் குயில்கள் கார் காலத்தில் துன்புறுகின்றன. நிலத்தின்மேல் செக்கச் செவேலென்றுள்ள இந்திர கோபப் பூச்சிகள் ஊர் கின்றன. х

மழை பெய்வதனால் மகிழச்சி அடைந்த எருமைகள் தம் கொம்புகளில் கொடிகளை மாட்டிக் கொண்டு விரர்களைப் போலக் கம்பீரமாக நடை போடுகின்றன.

இவ்வாறு கார் கால நிகழ்ச்சிகளைப் புலவர் வருணிக்

முதல் பாட்டிலேயே முல்லைத் திணைக்குரிய தெய்வ மாகிய திருமாலைப் பற்றிய செய்தியை உவமையாக எடுத்தாளுகிறார் புலவர். கடல் வண்ணத்தையுடைய திருமால் தன் மார்பில் அணிந்துள்ள வண்ண மலர் மாலையைப் போல இந்திர வில்லை குறுக்காக ஊன்றி,