பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. கார் நாற்பது 177

இனிய மழையானது விழ, அப்போது வருவேன் என்று சொன்ன தலைவர் மேகம் கருவுற்று முழங்கும் இந்தப் பருவத்தில் வாராரோ! வருவார்' என்று தோழி தலைவிக்குச் சொல்வதாக அமைந்தது பாட்டு.

"பொருகடல் வண்ணன் புனைமார்பில் தார்போல்

திருவில் விலங்குஊன்றித் தீம்பெயல் தாழ. வருதும் எனமொழிந்தார் வாரார்கொல் வானம் கரு இருந்து ஆலிக்கும் போழ்து?"

(பொரு கடல்-கரையை மோதும் கடல். திருவில். வானவில். விலங்கு-குறுக்கே, கரு இருந்து-நீரைக் கருப்ப மாக அடைந்து. ஆலிக்கும்-முழங்கும்.)

ஓரிடத்தில், பூத்த வெண் கடம்பமரத்துக்கு நாஞ்சி லாகிய கலப்பையையுடைய பலராமனை உவமை கூறு கிறார். இடியின் ஒசைக்கு முருகனுக்குரிய தொண்டகப் பறையின் ஒலியை ஒரு பாட்டில் உவமிக்கிறார்.

அந்தக் காலத்தில் கார்த்திகை மாதத்தில் திருக் கார்த்திகையில் இந்த நாட்டு மக்கள் விளக்கேற்றி இறைவனை வழிபட்டார்கள் என்ற செய்தி சங்க நூல் களில் வருகிறது. இந்த நூலிலும் அந்த விளக்கு உவமை யாக வருகிறது. கார்த்திகை விளக்கைப் போலச் செங் காந்தள் எங்கும் பூத்திருக்கின்றது. கார்காலம் வந்து விட்டது. உன் காதலர் வருகிறார் என்பதை உணர்த்தும் தூதுவரைப் போல மேகம் வந்திருக்கிறது” என்று தலைவிக்குத் தோழி சொல்வதாக அமைந்தது ஒரு பாட்டு.

திருமணம் செய்து கொண்டு வாழும் காதலன் இல் வாழ்வில் அறம் செய்வதற்கும் இன்பம் பெறுவதற்கும் பொருள் இன்றியமையாதது என்று உணர்வான். முன்னோர்கள் வைத்த பொருளில் அறம் செய்வதை