பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 தமிழ் நூல் அறிமுகம்

விரும்பாமல் தானே பொருள் ஈட்டி அறம் செய்து புகழ் பெற வேண்டும் என்று நினைப்பான். ஆகவே செல்வத்தை ஈட்டுவதற்குச் சில காலம் தன் மனைவியைப் பிரிந்து செல்வான். --

"புணர்தரு செல்வரும் தருபாக்குச் சென்றார் (11) செல்வம் தரல் வேண்டிச் சென்றகம் காதலர்." (14)

ஒதுவதற்காகத் தலைவன் பிரிந்து செல்வதும் உண்டு. கற்று ஐயம் நீங்கித் தெளிந்து பின்பு வருவான்

'ஐயந்தீர் காட்சி அவர் வருதல் திண்ணிதாம்'(18) என்ற இடத்தில் இதைக் காணலாம்.

அரசன் ஆணையை மேற் கொண்டு போர் செய் வதற்குப் பிரிவதும் உண்டு. .

விறுசால் வேந்தன் வினையும் முடிந்தன" (20)

வேந்தன் அருந்தொழில் வாய்த்த கமர் (37)

என்பவற்றில் தலைவன் வேந்தனுக்காகப் போர் புரியச் சென்ற செய்தி வருகிறது.

பல அழகான உவமைகளை இந்த நூலில் புலவர் ஆளுகிறார். . .

நடனம் ஆடும் மகளிரைப் போல அழகிய மயில்கள் ஆலுகின்றனவாம். பவழத்தைச் சிதறினாற் போலத் தரையில் இந்திர கோபப் பூச்சிகள் ஊர்கின்றனவாம். மாவடுவை இரண்டாகப் பிளந்து வைத்தால் எப்படி இருக்குமோ, அப்படிங் பெண்ணின் கண்கள் இருக் கின்றன. கண்ணுக்கு இடும் மையில் தோய்த்தது போலக் காயாவின் அரும்பு தோன்றுகிறது. . . . . . . . .

இந்த நூலுக்கு ஒரு சிறப்புப் பாயிரம் உண்டு. அது கார் நாற்பதையும் காராகிய மேகத்தையும் ஒப்பிட்டுச் சொல்கிறது.மின்னால் அழகு பெற்றகாரானது முல்லைக்