பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. கார் நாற்பது 179

கொடி மகிழவும், வண்டு மொய்க்கும் கூந்தலையுடைய மகளிர் உள்ளம் மகிழவும் மெல்ல மழையைப் பொழியும்; அதுபோல் சொற்களை ஆய்ந்து பாடும் கூத்தர் இயற்றிய இந்தக் கார் எங்கும் பரவி. பழைய நூல்களைப் பயின்று வல்லவர் உள்ளம் மகிழ இனிய தமிழைப் பெய்கிறது’ என்ற பொருளுடையது அந்தப் பாட்டு.

"முல்லைக் கொடிமகிழ மொய்குழலார் உள்மகிழ

மெல்லப் புனல்பொழியும் மின்னழில்கார்-தொல்லை நூல் வல்லார் உளம்மகிழத் தீந்தமிழை வார்க்குமே சொல் ஆய்ந்த கூத்தர்கார் சூழ்ந்து.'