பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. களவழி நாற்பது

பதினெண் கீழ்க்கணக்கில், புறத்துறையில் அமைந்த ஒரே நூல் களவழி நாற்பது. போர்க்களத்தில் நிகழும் காட்சிகளை நாற்பது பாடல்களால் பாடியதால் இந்தப் பெயர் பெற்றது. நாற்பது என்ற பெயர் இருந்தாலும் நூலில் 41 பாடல்கள் உள்ளன. இதைப் பாடியவர். பொய்கையார் . t -

சோழன் செங்கணானும் சேரமான் கனைக்கால் இரும்பொறையும் போர் என்ற இடத்தில் போரிட்ட போது, கோச்செங்கட் சோழன் சேரமானை வென்று. சிறையில் இட்டான். அப்போது பொய்கையார் என்னும் புலவர் சோழன் செய்த போரில் போர்க்களத்தில் நிகழ்ந்ததை இந்த நூலால் பாடிச் சோழனுடைய வீரத்தைப் புலப்படுத்திச் சிறையிலிருந்து சேரனை மீட்டார். இவ்வாறு நூலின் பின் உள்ள குறிப்புச் சொல் கிறது. சோழன் செங்கணானும் சேரமான் கணைக்கால் இரும்பொறையும் திருப்போர்ப் புறத்துப் பொருது உடைந்துழி, சேரமான் கணைக்கால் இரும்பொறையைப் பற்றிக்கொண்டு சோழன் சிறை வைத்துழி, பொய்கையார் களம் பாடி வீடுகொண்ட களவழி நாற்பது' என்பது அந்தக் குறிப்பு. -

இந்தச் செய்தியை ஒட்டக்கூத்தர் தாம் பாடிய மூவர் உலாக்களிலும் பாடியிருக்கிறார்,