பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. களவழி நற்பது 18 f

"மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப் பாதத் தளைவிட்ட பார்த்திவனும்' என்பது விக்கிரம சோழன் உலா.

'அணங்கு படுத்துப் பொறையனைப் பொய்கைக்குப் பண்டு கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோன்'

என்பது குலோத்துங்க சோழன் உலா.

'நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்கு வில்லவன் கால்தளையை விட்டகோன்'

என்பது இராசராச சோழன் உலா. கலிங்கத்துப் பரணியிலும் தமிழ் விடு தாதிலும் இந்தச் செய்தி வருகிறது. - -

ஆராய்ச்சியாளர்கள் இந்தச் செய்திக்கு ஆதாரம் ஒன்றும் இல்லை என்று கூறுவர். சங்கப் பாடல்களில் சில வற்றைப் பாடிய பொய்கையார் என்ற புலவர் ஒருவர் உண்டு. அவரும் இந்த நூலாசிரியரும் வேறு என்று எண்ணுவர் ஆராய்ச்சியாளர்.

போர்க்களத்துக் காட்சியை வருணிக்கும் இந்த நூலில் ஒவ்வொரு பாட்டும், “களத்து' என்று முடிகிறது. நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா என்னும் மூவகைப் பாக்களாலும் அமைந்தது இந்த நூல். 19 வெண்பாக்கள் பஃறொடை வெண் பாக்கள்; நான்கடிக்கு மேல் உள்ளவை. மற்றவை நான்கடி உள்ள வெண்பாக்கள், பஃறொடை வெண் பாக்களில் மூன்று ஆறடிகள் உள்ளவை; பதினாறும் ஐந்தடிகள் உடையவை, - - -

நூலில் சோழனைப் பெயர் சொல்லிச் சுட்டவில்லை. பொதுவாகச் சோழனைச் சிறப்பிக்கும் தொடர்களும்,

あー12 。 - -