பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 தமிழ் நூல் அறிமுகம

திருமாலாகவும் முருகனாகவும் உவமிக்கும் தொடர் களுமே வந்துள்ளன. புனல் நாடன், காவிரி நீர் நாடன் என்பவை பொதுவாகச் சோழன் என்பதைக் குறிக்கும் தொடர்கள். செங்கண்மால், செங்கண் சினமால் என்று திருமாலாவும், செருமொய்ம்பிற் சேய், தளையவிழ்தார்ச் சேய், அடர்பைம்பூண் சேய் என்று முருகனாகவும் கூறும் தொடர்கள் சோழனைக் குறிக்கின்றன. பகையரசன் இன்னான் என்று குறிப்பிட்டுக் கூறவில்லை. பல பாடல் களிலும் பகைவர் என்னும் பொருளைத் தரும் சொற்களே வருகின்றன. தப்பியார், பிழைத்தார், புல்லார், வேந்தர், பொருநர், நண்ணார், நேரார், தெவ்வர்,கூடார். உடற்றி யார், செற்றார், மேவார், அடங்கார், ஒன்னார். காய்ந் தார், அரசு, துன்னார் என்று பகையரசர்களைச் சொல் கிறார் புலவர். ஒாடத்தில், 'கொங்கரை அட்ட களத்து' என்றும் மற்றோரிடத்தில், 'வஞ்சிக்கோ அட்ட களத்து' என்றும் வருகின்றன. இவற்றால் சோழனோடு போரிட்ட வர்கள் கொங்கு நாட்டு அரசர்களும் சேரரும் என்று

தெரிந்து கொள்ளலாம். கொங்கர் சேர மன்னருக்குத் துணையாக வந்திருக்கலாம்.

போர்க்களத்தில் யானைகள் பட்ட பாட்டையும் வீரர்

களும் குதிரைகளும் பட்ட அல்லலையும் இதில் உள்ள

பாடல்கள் சொல்கின்றன . யானைகளின் நிலையை வருணிக்கும் பாடல்களே மிகுதி. . -

யானைகள் போரில் இறந்து கிடக்கின்றன. இரத்தம் தேங்கி யிருக்கிறது. யானையின் கீழ் அகப்பட்ட முரசின் தோல் பிய்ந்து விட்டது. தேங்கி நின்ற இரத்தம் அந்தத் துவாரத்தின் வழியே பாய்கிறது. செம்மண் நிலத்தி லுள்ள குளத்தில் கரையின் கீழுள்ள கலிங்கின் வழியாகச் சிவந்தநீர் ஒடுவது போல இந்தக் காட்சி இருக்கிறது. கரிய யானைகள் குளத்தங் கரைபோல இருக்கின்றன.