பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. களவழி நாற்பது 183

கீழே அகப்பட்ட தோல் போன முரசங்கள் நீர் ஒடும் கலிங்கு போல உள்ளன. இரத்தம் செந்நீர் போல இருக் கிறதாம்.

"ஞாட்பினுள் எஞ்சிய ஞாலம்சேர் யானைக்கீழ்ப் போர்ப்பில் இடிமுரசின் ஊடுபோம் ஒண்குருதி கீர்த்தும்பு நீர்உமிழ்வ போன்ற, புனல்காடன் ஆர்த்து அமர் அட்டகளத்து. (2) 1ஞாட்பு-சண்டை. எஞ்சிய அழிந்த ஞாலம் சேர்தரையில் விழுந்த, போர்ப்பு-மேலே போர்த்த தோல். நீர்த் துாம்பு-நீர் ஓடும் கலிங்கு. புனல் நாடன்-சோழன்.)

பகைவர்களுடைய உடலின் மேலும் யானைகளின் மேலும் அம்புகள் பாய்ந்து கிழிக்கின்றன; வேல்கள் பாய்கின்றன. இரத்தம் வழிகிறது. காக்கைகள் அந்த இரத்தத்தில் படிந்து நுகர்கின்றன. அப்போது அவற்றின் மேலெல்லாம் இரத்தம் படிந்து நிறம் மாறிச் செந்நிறம் பெற்றுச் செம்போத்துக்களைப் போலத் தோன்றுகின்றன. அவற்றின் வாயெல்லாம் மீன் கொத்திக் குருவிகளின் வாயைப் ப்ோலச் செக்கச் செவேலென்று இருக்கின்றன.

'தெளிகணை எஃகம் திறந்தவாய் எல்லாம் குருதி படிந்துஉண்ட காகம்-உருஇழந்து குக்கில் புறத்த; சிரல்வாய, செங்கண்மால் தப்பியார் அட்ட களத்து.' - - - (தெரிகணை. ஆராய்ந்து விடும் அம்புகள்.எஃகம்-வேல் குக்கில்-செம்போத்து. சிரல் வாய-மீன் கொத்தியின் வாயைப் போன்ற வாயை உடையவை. தப்பியார். பகைவர்.1 ‘. . . . . . . .

யானைகளின்மேல் பல அம்புகளைச் சோழன் விட அவை அவற்றின்மேல் தைத்திருக்கும் காட்சி, குன்று களின்மேல் குருவிகள் உட்கார்ந்தது போல இருக்கிற