பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 - தமிழ் நூல் அறிமுகம்

தாம் வேலினாலே வீரர்கள் யானையின் துதிக்கைய்ைக் குத்தி வீழ்த்த அது இடி பாய்ந்த மலைப்பாம்பைப் போலத் தரையில் புரளுகிறதாம்.

வீரர்கள் வீரர்களைத் தாக்க அவர் உடம்பிலிருந்து விழும் இரத்தம் கார்த்திகை விழாவில் ஏற்றின விளக்குப் போலத் தோன்றுகிறதாம். இதனால் அந்தப் பழங்காலத் திலேயே கார்த்திகை விழா நடந்ததென்றும், அப்போது விளக்கேற்றி வழிபட்டார்கள் என்றும் தெரிந்துகொள்ள

á tjffl ÍH » - -

யானையின்மேல் ஒரு வீரன் வேலை எறிந்தான். அந்த வேல் யானையின் தந்தத்தினூடே புகுந்து, இலைப்பகுதி மறைந்தது. நீளமான பகுதியும் மறைந்தது. அதன் கீழ்க் கடைமணி என்ற வளையம் போன்ற பகுதி இருக்கும்.அது வரையில் மறைந்து விட்டது. கடைமணியும் அதன் கீழுள்ள பகுதியும் மாத்திரம் தந்தத்தினிடையே இருக்கின்றன. அப்போது அந்த யானைக்கு மூன்று கொம்புகள் முளைத்தது போல அந்தக் காட்சி இருந்ததாம். ‘. . .

இடைமருப்பின் விட்டுஎறித்த எஃகம்காழ் மூழ்கிக் கடைமணி காண்வரத் தோன்றி-நடைமெலிந்து முக்கோட்ட போன்ற களிறெல்லாம், நீர்நாடன் புக்குஅமர் அட்ட களத்து' - - (பருப்பு-கொம்பு. எஃகம்-வேல். காழ்-நீண்ட கோல் போன்ற பகுதி. கடைமணி-கீழே உள்ள முடிச்சுப் போன்ற பகுதி. முக்கோட்ட-மூன்று கொம்புகளை உடையவை.)

வீரர்களின் தலைகள் எங்கும் சிதறிக் கிடக்கின்றன, பெரிய குறைக் காற்று வீசம் பனந்தோப்பில் பனங் காய்கள் உதிர்ந்து சிதறிக் கிடப்பது போல இருக்கிறது.

அந்தக் காாட்சி. . . . . . - -