பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. களவழி நாற்பது - i85

'திண்தோள் மறவர் எறியத் திசைதோறும்

பைந்தலை பாறிம் புரள்பவை, கன்குனனைத்தும் பெண்ணையங் தோட்டம் பெருவளி புக்கற்றே கண் ஆர் கமழ்தெரியல் காவிரி நீர்நாடன் கண்ணாரை அட்ட களத்து.'

(மறவர்-வீரர். எ றி ய-.ெ வ ட் ட. பாறி-சிதறி. பெண்ணை-பனை. பெருவளி-பெருங் காற்று. கண்ஆர். அழகையுடைய, .ெ த ரி ய ல் - மா ைல, நண்ணாரை

பகைவரை, !

கேடயம் பிடித்திருக்கும் கையை ஒரு வீரன் வெட்டி விட்டான். கேடயம் பிடித்தபடியே உள்ள அதை நரி கொண்டு போகிறது. கையில் கண்ணாடியை வைத்துப் பார்க்கிற மாதிரி இருக்கிறது அந்தக் காட்சி'

யானைகள் துதிக்கைகளை இழந்து நிற்பதும் வீரர்கள் புண்பட்டு வீழ்வதும், குருதி ஆறாக ஓடுவதும், குடைகள் காளான்களைப் போல இரத்தத்தில் மிதப்பதும், தம் கணவரை இழந்த மகளிர் மயிலினத்தைப் போலவாடி அழுது புலம்புவதும் முதலிய காட்சிகளை அங்கங்கே காணலாம். - -

எல்லாம் போர்க்களத்தில் போர் முடிந்த பிறகு காணும் காட்சிகள். இந்த நூலுக்கு ஒரு பழைய உரை இருக்கிறது. வீரத்தைவிட அவலத்தையும் இளிவரல் சுவ்ையையுமே மிகுதியாகக் கொண்டது இந்த நூல்.