பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. ஜந்திணை ஐம்பது

அகப்பொருளில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்று ஐந்து திணைகள் வரும். ஆகையால் இவற்றை அகன் ஐந்திணை என்று சொல்வார்கள். அகப் பொருள் அமைதியையுடைய காட்சிகளைத் தொடர்ச்சி யாகக் கதை போல வைத்துப் பாடும் கோவை என்னும் பிரபந்தத்தை ஐந்திணைக் கோவை என்றும் சொல்வது உண்டு. பதினெண் கீழ்க்கணக்கில் அகப்பொருள் அமைந்த நூல்கள் ஆறில் இரண்டு ஐந்திணை என்ப தோடு சார்ந்த பெயரை உடையவை ஐந்திணை ஐம்பது,

ஐந்திணை எழுபது என்பவை அவை, - -

ஐந்திணை ஐம்பது ஒவ்வொரு திணைக்கும் பத்துப் பத்து வெண்பாக்களாக ஐம்பது பாடல்களைக் கொண்ட நூல். முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற வரிசையில் திணைகள் இந்நூலில் அமைந்துள்ளன. இதை, இயற்றியவர் மாறன் பொறைய னார். மாறன் என்பவருடைய புதல்வராகிய பொறையனார் என்றும். இத்தொடருக்குப் பொருள் கொள்ளலாம். மாறன் என்பது பாண்டியனுடைய பெயர். பொறையன் என்பது சேரன் பெயர். இவர் தந்தையார் பாண்டி நாட்டில் வாழ்ந்த, பொழுது பிறந்தமையால் இவர் தந்தைக்கு மாறன் என்ற பேயர் வைத்தனர் என்றும், அவ்வாறே இவர் தந்தையார் சேர நாட்டுக்கு வந்த பிறகு இவரைப் பெற்றமையால்