பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சங்க நூல்கள்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் தமிழ் மிகச் சிறந்த நிலையில் இருந்தது: தமிழ் நாட் டுக்கே அது பொற்காலம்' என்னும் வார்த்தை அடிக்கடி நம் காதில் விழுகிறது. அந்தக் காலத்தைத்தான் சங்க காலம் என்று சொல்கிறோம். மதுரையில் பாண்டிய மன்னர்களுடைய ஆதரவில் பல புலவர்கள் ஒன்று கூடித் தமிழ் நூல்களை இயற்றினார்கள்; ஆராய்ச்சி செய்தார் கள். அவர்கள் பிறர் இயற்றிய நூல்களையும் பார்த்து நல்லனவாக இருந்தால் பாராட்டினார்கள். இவ்வாறு எழுந்த நூல்களையே சங்க நூல்கள் என்று சொல்கிறோம். . . . - ...

சங்கம் என்ற சொல் தமிழ் அன்று பழைய. நூல்களில் அந்தச் சொல் இல்லை. இறையனாரகப் பொருள் என்ற அகப்பொருள் இலக்கண நூலின் உரையில் உரை யாசிரியர் மூன்று சங்கங்கள் வெவ்வேறு காலங்களில் இருந்தன என்று எழுதியிருக்கிறார். தமிழ் நாட்டில் குமரிக்கும் தெற்கே இருந்த மதுரையில் முதல் சங்கம் இருந்ததாம். அந்த நகரத்தைக் கடல் விழுங்கிவிட்டது. பிறகு அதற்குச் சற்று வடக்கே இருந்த கபாடபுரத்தில் இரண்டாவது சங்கம் இருந்ததாம். அதை இடைச் சங்கம் என்பார்கள். கபாடபுரத்தையும் கடல் கொண்டது. பிறகு இப்போதுள்ள மதுரையில் மூன்றாம் சங்கத்தைப்