பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. ஐந்திணை ஐம்பது 187

இவருக்குச் சேரன் பெயரை இட்டனர் என்றும் கொள்ளலாம். -

இந்த நூலைச் செந்தமிழ்ப் புலவர்கள் விரும்பிப் பயின்று இன்புற்றார்கள்.

பண்புள்ளி கின்ற பெரியார் பயன்தெரிய

வண்புள்ளி மாறன் பொறையன் புணர்த்தியாத்த ஐந்திணை ஐம்பதும், ஆர்வத்தின் ஒதாதார், செந்தமிழ் சேராத வர்

என்று இந்நூலுக்கு அமைந்த சிறப்புப் பாயிரம் இந் நூலின் பெருமையைச் சொல்கிறது. இதிலிருந்து இந் நூலாசிரியரின் ஊர் புள்ளி என்று புலனாகிறது.

இந்நூலின் முதல் பாட்டில் ஆசிரியர் திருமால், முருகன், சிவபெருமான் என்ற மூன்று கடவுளரையும் உவமை கூறும் வாயிலாகக் குறிக்கிறார். கடவுள் வாழ்த் தாகச் சொல்லாவிட்டாலும், எடுத்தவுடன் அத்தக் கடவுளரை நினைக்கச் செய்தலின், ஒருவகையில் இதனை மறைமுகமான கடவுள் வாழ்த்தென்றே கொள்ளலாம்.

காதலன் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் கார் காலத்தில் திரும்பி வருவதாகச் சொல்விப் போயிருக் கிறான். அவனுடைய பிரிவை ஆற்றாமல் வருந்துகிறாள் காதலி. அப்போது அவளுடைய தோழி, "இதோ மேகங்கள் வானில் உலாவுகின்றன. கார் காலம் வந்து விட்டது. உன் காதலர் வந்து விடுவார் என்று கூறித் தெளிய வைக்கிறாள். அங்கே மேகத்தைப் பற்றிச் சொல்லும் போது, "கஞ்சனுடைய மல்லர்களை வென்ற கண்ணனைப் போலக் கருநிறம் கொண்டு எழுந்து, வளமுடைய கடம்பமலரை விரும்பிய முருகனுடைய வேலைப் போல மின்னி, வானத்தில் பறந்த திரிபுரங்களை எய்த சிவபெருமானுடைய கொன்றைகள் மலர இதோ