பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 - தமிழ் நூல் அறிமுகம் பல மேகங்கள் கலந்து வலமாக வானத் தில் எழுகின்றன’’ என்று கூறுகிறாள். t

'மல்லர்க் கடந்தான் நிறம்போன்று இருண்டு எழுந்து செல்வக் கடம்புஅமர்ந்தான் வேல்மின்னி - நல்லாய் இயங்குளயில் எய்தவன் தார்பூப்ப ஈதோ மயங்கி வலன்னரும் கார்.' (கடந்தான். வென்றவன்; கண்ணன். அமர்ந்தான்விரும்பியவன். எயில்-மதில். இங்கே திரிபுரங்கள்; தார்கொன்றை மாலை. மயங்கி-கலந்து. ... " -

இருண்டு வருகின்றது மாலைக் காலம். அப்போது முல்லை மலர் மலர்ந்து ம்ணக்கிறது. வண்டுகள் அம்மலர் களில் மொய்த்து முரலுகின்றன. அந்த இன்னிசை, தம்முடைய காதலரோடு சேர்ந்து இருப்பவர்களுக்கு இனியதாக இருக்கிறது. ஆனால் காதலரைப் பிரிந்து வாழுபவர்களுக்கு, மாலைக் காலமும் முல்லை மலரும் வண்டின் குரலும் தனிமைத் துயரை மிகுதிப்படுத்தி, உயிரையே அறுக்கின்றன. இதை ஒருத்தி சொல்கிறாள் :

'முல்லை நறுமலர்ஊதி இருந்தும்பி

செல்சார்வு உடையார்க்கு இனியவாய், கல்லாய்மற்று யாரும் இல் கெஞ்சினேம் ஆகி உறைவேமை ஈரும் இருள்மாலை வந்து.' - (இருந்தும்பி-கரிய வண்டுகள். செல் சார்வு உடை யார்க்கு-தாம் சென்று அடையும் பற்றுக்கோடு உடைய வர்களுக்கு; காதலர்கள் அருகில் இருக்கப் பெற்றவர் களுக்கு என்பது பொருள். ஈரும்-பிளக்கும். இருள் மாலை-இருண்டு வரும் மாலைக் காலம். தும்பி இருள் மாலையில் வந்து ஈரும் என்று கூட்டிப் பொருள் செய்ய வேண்டும். - . .

காதலன் காதலியைப் பிரிந்து பொருள் தேடச் சென்றிருக்கின்றான். முயற்சி பலித்துப் பொருள் ஈட்டிக் கொண்டு திரும்ப எண்ணுகிறான். கார் காலத்தில்