பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. ஐந்திணை ஐம்பது 1so

வருவேன் என்று தன் காதலியிடம் சொல்லி வந்தவன் அவன். இப்போது தன் காதலியை விரைவில் சென்று அடைய வேண்டும் என்ற ஆர்வம் உந்துகிறது. தன் தோ ஒட்டியைப் பார்த்து, 'விரைவில் தேரை விடு' என்று சொல்கிறான். அவனைத் தட்டிக் கொடுத்துப் புகழ்கிறான். முதலில், நீ குதிரையை ஒட்டும் வயணங் களை அறிந்தவன். அதற்குரிய நூல்களைக் கற்றவன் ஆயிற்றே! விரைவாக ஒட்டும் தந்திரம் அறிந்தவன் அல்லவா நீ?" என்று பாராட்டுபவனைப் போல அவ ை அழைக்கிறான்.

'நூல்ாவின்ற பாக!' நவின்ற-பயின்ற1

"நம்முடைய தேர் விரைவாகப் போகட்டும் என்று அவனிடம் சொல்கிறான். 苓

தேர் கொவ்விதாச் சென்றீக!'

(நொவ்விதா-விரைவாக. சென்றிக செல்லட்டும்.1

அங்கே ஊரில் என் வரவை எதிர் நோக்கிக் காதலி காத்திருப்பாள். அவளைப் போய்ப் பார்ப்போம்" என்று சொல்ல வருகிறான். அங்கே அவள் நிற்கும் நிலையைச் சொல்வினால் ஒரு சிறிய படம் போட்டுக் காட்டுவது போலக் காட்டுகிறான்.

காதலி தன் காதலன் வரவை எதிர் பார்த்து நிற் கிறாள். கற்பு என்னும் தாழ்ப்பாளைப் போட்டுத் தன்னைக் காத்துக்கொண்டு நிற்கிறாள். ஒரு கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு எதிரே தோன்றும் காட்டைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். தன் காதலன் வரவைக் காட்டும் கடிகாரம் போல அந்தக் கானம் இருக்கிறது. அந்தக் காடு இப்போது கார் காலம் வந்து விட்டமை யால் நன்றாகத் தழைத்து மலர் பொதுள எழிலுடன்