பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 தமிழ் நூல் அறிமுகம்

விளங்குகிறது. மலர்களில் வண்டுகள் மொய்த்து முரலு: கின்றன. அந்தக் கானத்தின் எழிலை நோக்கி, இனி நம் காதலர் வருவார்' என்று எதிர் பார்த்து நின்று கொண்டிருக்கிறாள்.

அவள் நிலையைப் போய்ப் பார்ப்போம்; தேர்வேகமாகப் போகட்டும்! என்கிறான் தலைவன். -

நூல்கவின்ற பாகதேர் கொவ்விதாச் சென்றிக - தேன்.கவின்ற கானத்து எழில்கோக்கித்-தான் கவின்ற கற்புத்தாழ் வீழ்த்துக் கவுள்மிசைக் கைஊன்றி கிற்பாள் கிலை உணர்கம் யாம்.'

(நூல் நவின்ற-குதிரை நூல்களைக் கற்ற, தேன்வண்டுகள்.நவின்ற-ஒலிக்கும்.தான் நவின்ற-தான் பயின்ற. கற்புத் தாழ் - கற்பாகிய தாழ்ப்பாளை. கவுள்மிசைகன்னத்தில்.] - - -

காதலன் பிரிந்து சென்றிருக்கிறான். காதலி பிரிவுத் துயரம் தாங்காமல் வருந்துகிறாள். அது கண்டு அவள் தோழி அவளுக்கு ஆறுதல் கூறுகிறாள். அவர் போகும் வழியில் மான்கள் அன்பு கொண்டு செய்யும் செயலைக் கண்டு திரும்பி வந்து விடுவார்' என்ற குறிப்புத் தோன்ற, பாலையில் வழியில் நிகழும் காட்சி ஒன்றை எடுத்துச் சொல்கிறாள். . - -

நீர் வறண்ட பாலை நிலம். தமிழ்நாட்டில் இயற்கை யான பாலை நிலம், இல்லை. இயற்கையான பாலை நிலமானால் எங்கும் மணல் பரந்திருக்கும். இங்கே கோட்டை மிகுதியால் மலைப்பக்கத்துப் பகுதிகளும் காட்டுப் பகுதிகளும் வறண்டு போய்விடும் அவற்றைப் பாலை என்று சொல்வர். - -

தோழி குறிப்பிடும் பாலையில் ஒரு காலத்தில் சுனை களில் நீர் இருந்தது. இப்பொழுது பல சுனைகள்