பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2?. ஐந்திணை ஐம்பது 19%.

வறண்டிருக்கின்றன. ஏதோ ஒரு சுனையில் சிறிதளிவு நீர் இருக்கிறது. அதன் அருகில் ஆண் மானும் பெண் மானும்

வருகின்றன. இரண்டுக்கும் மிக்க நீர் வேட்கை, சுனையில் உள்ள தண்ணிர் இரண்டினுடைய தாகத்தையும் போக்கப்

போதாது. ஆண் மான் அந்த நீரைப் பெண் மான்

குடிக்கட்டும் என்று எண்ணுகிறது. பெண் மானோ ஆண்

குடிக்கட்டும் என்று நினைக்கிறது. இந்த அன்புப் போட்டி

யில் ஆண் மான் ஒரு தந்திரம் செய்கிறது.

ஆண் மான் குடித்தால்தான் பெண் மான் நீரைக் குடிக்கும். சுனை நீரோ இரண்டுக்கும் போதாது. இதைக் குடி' என்று வற்புறுத்தினால் பெண் மான் இனிது உண்ணாது. தன் கணவன் உண்டான் என்பதைக் கண்ட பிறகு பெண் ம்ான் உண்டால் அது. இனிது உண்ணும்: அதன் வேட்கை தணியும். இதை அறிந்த ஆண் மான் தண்ணிரைக் குடிப்பது போலப் பாவனை புரிகிறது;பொய் யாக உறிஞ்சுகிறது. இனிப் பெண் மான் இனிது மன மகிழ்ந்து உண்ணும் என்று எண்ணுகிறது. இந்தக் காட்சியைச் சொல்கிறாள் தோழி.

"சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதுஎன்று எண்ணிப்

பிணைமான் இனிதுஉண்ன வேண்டிக் கலைமாத்தன் கள்ளத்தின் ஊச்சும் சுரம்என்பர் காதலர் உள்ளம் படர்ந்த நெறி,"

(சுனையிலே உள்ள சிறிதளவு நீரை, நம் இருவருக்கும் போதாது என்று நினைந்து, பெண் மான் இனிதாக உண்ணுவதை விரும்பி, ஆண் மான் பொய்யாக உறிஞ்சும் பாலை வழி என்று சொல்வார்கள், உன் காதலர் போவதாக நெஞ்சில் விரும்பிய வழியை..! -

- ஆண் மான் தன் காதலியாகிய பெண் மானுடைய நலத்தை விரும்பித் தன் நலத்தைத் தியாகம் செய்யும்: