பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19? தமிழ் நூல் அறிமுகம்

இந்தத் காட்சியைக் கண்டால் அவர் திரும்பி வந்து விடுவார்’ என்ற குறிப்பை உள்ளடக்கி இவ்வாறு சொன்னாள் தோழி.

இப்படி ஒவ்வொரு வெண்பாவும் ஒவ்வொரு காட்சி யாக அமையும்படி இருப்பதை இந்நூலில் பார்க்கலாம்.

இரண்டு பா ட ல் க ளி ல் பொதுவாக நீதிகள் இரண்டை ஆசிரியர் சொல்கிறார். அறிய வேண்டியதை அறிந்த அறிஞர்களுடைய உறவை அவர் நடக்கும் முறையே சொல்லாதோ? பிறர் எடுத்துச் சொல்ல வேண்டுமோ?' என்று பாணனிடம் தோழி கூறுகிறாள். தலைவன் பரத்தையர்பால் நட்புப் பூண்டு ஒழுகுகிறான். அவன் நல்லவன் என்று பாணன் வந்து சொல்கிறான். அப்போது இதைச் சொல்கிறாள் தோழி.

"யாணர் அகல்வயல் ஊரன் அருளுதல்,

பாண, பரிந்துரைக்க வேண்டுமோ?-மாண அறிவது அறியும் அறிவுடையார் கேண்மை நெறியே உரையாதோ மற்று' களவுக் காதலில் ஈடுபட்டிருக்கும் காதலனைப் பார்த்துத் தோழி. விரைவில் மணம் செய்து கொள்ள வேண்டும் என்று குறிப்பாகப் புலப்படுத்துகிறாள். "காதலி மிகவும் மெலிந்து வருந்துகிறாள். அதைத் தீர்ப்பது உன் கடமை என்று நேரே சொல்லாமல் குறிப் பாகச் சொல்கிறாள்.

'எக்கர் இடுமணல்மேல் ஒதம் தரவந்த

கித்திலம் கின்றுஇமைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப மிக்க மிகுபுகழ் தாங்குபவோ, தற்சேர்ந்தார் ஒற்கம் கடைப்பிடியா தார்?' - (மேடாக இட்ட மணல் மேலே அலைகள் கொண்டு வந்து போடத் தங்கிய முத்துக்கள் ஒளி விடும் நீண்ட