பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. ஐந்திணை எழுபது .

பதினெண் கீழ்க்கணக்கில் அகப்பொருளைப் பற்றிச் சொல்லும் நூல்களில் ஒன்று, ஐந்திணை எழுபது. இந்த நூலின் பெயரிலிருந்தே இது அகத்துக்குரிய ஐந்து திணைகளைப் பற்றியும் பாடிய எழுபது பாடல்களை உடையது என்பதை அறியலாம். திணைக்கு 14 பாடல் களாக ஐந்து திணைகளுக்கும் எழுபது பாடல்களை உடையது. குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற வரிசையில் ஐந்து திணைகளும் இந்த நூலில் அமைந் திருக்கின்றன. -

இதனை இயற்றியவர் மூவாதியார் என்பவர். இந்த நூலுக்கு விநாயகரைத் துதிக்கும் காப்புச் செய்யுள் ஒன்று. - -

எண்ணும் பொருள்.இனிதே எல்லாம் முடித்தெமக்கு

கண்ணும் கலை அனைத்தும் கல்குமால், கண்ணுதலின் முண்டத்தான். அண்டத்தான், மூலத்தான், ஆலம்சேர் கண்டத்தான் ஈன்ற களிறு

என்பது அந்தப் பாடல். கண்ணையுடைய நெற்றியில் திரிபுண்டரமாகிய திருநீற்றை உடையவனும், எல்லா அண்டங்களுக்கும் தலைவனும், எல்லாவற்றிற்கும் மூலப் பொருளாக உள்ளவனும், நஞ்சு சேர்ந்த திருக்கழுத்தை உடையவனுமாகிய சிவபெருமான் பெற்ற யானையாகிய