பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. ஐந்திணை எழுபது 1 95

விநாயகப் பெருமான், நாம் எண்ணுகின்ற பொருள்கள் எல்லாம் இனிதே நிறைவேற்றி, நமக்கு அடைகின்ற கலைகள் பலவற்றையும் வழங்கியருள்வான்' என்பது

இதன் பொருள்.

சில ஆராய்ச்சியாளர்கள், இது பிற்காலத்தில் யாரோ எழுதிச் சேர்த்தது என்று கருதுகின்றனர்.

அகப்பொருளைச் சொல்லும் நூல்களில் இருப்பதைப் போல இந்த நூலில் ஐந்து திணைகளில் உள்ள இயற்கை யமைப்பையும், தலைவன் தலைவியிடையே உள்ள காத வின் நுட்பத்தையும் காணலாம்.

காதலன் காதலியோடு களவுக் காதல் செய்து வருகிறான். அவர்களுடைய அந்தரங்கங்களைத் தெரிந்த தோழி காதலிக்கு உறுதுணையாக இருக்கிறாள். களவுக் காதலில் எத்தனையோ இடையூறுகள் உண்டு காதலன் சில நாள் வரமுடியாமல் போகும். காதலிக்கு அவள் தாய் அமைத்த கட்டுக் காவல் மிகுதியாக இருக்கும். அதனால் அந்தப் பெண் அஞ்சுகிறாள்;மெலிகிறாள். அதைக் கண்ட தோழிக்குக் கவலை உண்டாகிறது, "இப்படியே வந்து கொண்டிருக்கிறாரே; உன்னுடைய கவலையை உணர்ந்து கொண்டவராகத் தெரியவில்லையே!' என்று காதலி யிடம் கூறுகிறாள். காதலனுடைய இயல்பைக் குறை கூறுவதனால் இதை இயற்பழித்தல் என்று சொல்வார்கள். அதைக் கேட்ட காதலி தன் காதலன் குறைபாடு உடையவன் அல்லன் என்று சொல்கிறான். அவனை விட்டுக் கொடுக்க மனம் வருமா? இவ்வாறு சொல்வதை இயற்பட மெர்ழிதல் என்பார்கள். - -

காதலன் பகல் நேரத்தில் தன் காதலியைக் கண்டு அளவளாவுவதற்காக வந்து மறைவில் நிற்கிறான். அவன் வந்திருப்பது தெரிந்து தோழி 'உன்னுடைய