பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 தமிழ் நூல் அறிமுகம்

வருத்தம் தெரியாதவராக இருக்கிறாரே' என்று குறை கூறும்போது காதலி, காதலனுக்கும் தனக்கும் உள்ள பிணைப்பைப் பற்றிச் சொல்கிறாள். தலைமகன் சிறைப் புறத்தானாக, இயற்பழித்த தோழிக்குத் தலைமகள், இயற். பட மொழிந்தது' என்பது இந்தத் துறைக்குப் பெயர். தலைவி சொல்கிறாள் :

"என் காதலன் என்னிடம் வைத்துள்ள காதலைப் பற்றி நீ நன்றாக உணர்ந்து கொள்ளவில்லை. அவர் சால்புடையவர். சால்புடையவர்களுடைய உறவு எதனா லும் சிதைவுறாதது; நன்றாக நிலைகொள்வது; வலிமை யுடையது. அதனால் பின்னாலே நல்ல பயன் உண் டாகும். என் காதலருடைய உறவு மெலிவு இல்லாதது; அவர் பொய்கைகளை உடைய சோலைகள் நிரம்பிய மலைக்குத் தலைவர். அவருடைய மலை குளிர்ச்சியும் தன்னைச் சார்ந்தாருக்கு நிழலும் தருவது போலே அவரும் தம்மைச் சார்ந்தாருக்கு மகிழ்ச்சியையும் பாதுகாப்பையும் தருபவர். அவருடைய நட்புறவு மிக்க இனிமையை உடையது; நேர்மையானது. இவ்வாறு என்னுடைய மனச்சாட்சி சொல்கிறது' என்று அந்த இளம் பெண் சொல்கிறாள். - "சான்றவர் கேண்மை சிதைவுஇன்றாய் ஊன்றி,

வலிஆகிப் பின்னும் பயக்கும்; - மெலிவுஇல் கயம்திகழ் சோலை மலைநாடன் கேண்மை நயம் திகழும் என்னும்என் நெஞ்சு ' |கயம்-பொய்கை, நயம் அன்பு, நேர்மை.). இது குறிஞ்சித்திணையில் உள்ள பாட்டு. -

காதலன் இரவுக் காலத்தில் தன் காதலியைப் பார்க்க

வத்து கொண்டிருக்கிறான். காடும் மலையும் தாண்டி வருகிறான். வருகிற வழியில் காட்டு விலங்குகள்