பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 தமிழ் நூல் அறிமுகம்

என்ன சொல்ல வேண்டும்?'

'அவர் மலையில் பாம்புகள் உலாவும், அவற்றைக் கண்டு அஞ்சாமல் வருகிறார். இந்த இடத்தில் காட்டு விலங்குகள் உலாவும்; இங்கே வந்தால் அவருக்கு என்ன துன்பம் வருமோ என்று என் உள்ளம் நடுங்குகிறது. ஆதலால்-' -

என்ன செய்யவேண்டும் என்று சொல்லச் சொல். கிறாய்?" ‘.

'இராத்திரி வேளைகளில் நம்முடைய வீட்டுப்பக்கம் வரவேண்டாம் என்பதைச் சொல்.” .

இதைக் கேட்டு முதலில் வியப்படைகிறாள் தோழி. அவர் ஒரு நாள் வராவிட்டாலும் வருந்துகிற இவளா இப்படிச் சொல்கிறாள்!" என்று வியக்கிறாள். பிறகு, உண்மை புலனாகிறது,'இரவில் வரவேண்டாம்,எல்லாரும் கண்டு வரவேற்கும்படி திருமணம் செய்து கொள்ள வா என்பதையே அவள் சொல்லாமல் சொல்கிறாள் என்ப தைத் தோழி தெரிந்து கொள்கிறாள்.

"தலைமகன் வரும் வழியின் ஏதத்திற்குக் கவன்ற தலைமகள், வரைவு வேட்டுத் தோழிக்குச் சொல்லியது என்பது இந்தப் பாட்டின் துறை. ஏதம்துன்பம். கவன்றகவலையுற்ற வரைவு வேட்டு-திருமணத்தை விரும்பி,

பாட்டு வருமாறு: - * - - "குறைஒன்று உடைய்ேன்மன் தோழி; கிறைஇல்லா

மன்உயிர்க்கு ஏமம் செயல்வேண்டும்; இன்னே அராவழங்கு நீள்சோலை நாடனை, கம்இல் இராவாரல் என்பது உரை." (குறை ஒன்று ஒரு காரியம், நிறை-நிறுத்துதல். ஏமம்ாதுகாப்பு. இன்னே-இப்பொழுதே வாரல்-வராதே.).