பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்திணை எழுபது 199

பிரிந்து போன தலைவன் கார்காலத்தில் வத்து விடு வேன் என்று சொல்லிப் போயிருக்கிறான். கார்காலம் வந்து விட்டது. அவன் வரவில்லை கார்காலத்தில் வானத்தில் மேகங்களைக் கண்டால் மயில்கள் ஆடும். இப்போது இளைய மயில்கள் ஆடுகின்றன. கடலில் உள்ள நீரை முகந்துகொண்டு கரிய அழகிய மேகங்கள் வானத் தில் மின்னலோடு உலாவுகின்றன. அவற்றை எல்லாம் கண்டு வருந்துகிறாள் காதலி. இந்தச் சமயத்தில் எனக்கு ஆறுதல் சொல்ல யாரும் இல்லையே! எப்படி இருக்கிறாய் என்று கேட்க யாரும் இல்லையே! என்று சொல்லி நைகிறாள். தோழியைப் பார்த்து இப்படிச் சொல்கிறாள்.

தோழியை, தட மென் பனைத்தோல்ரி' என்று அழைக்கிறாள். விசாலமான மெல்லிய மூங்கிலைப் போன்ற தோளை உடையவளாக இருக்கிறாள் அந்தத் தோழி. தலைவியோ தோள் மெலிந்து வாடுகிறாள். தன்னுடைய தோளையும் தோழியுடைய தோளையும் ஒப்பிட்டுப் பார்க்கிறாள். அவளுக்குத் தோள் மெலிந்த தற்குக் காரணம், அவளுடைய காதலன் இன்னும்வராதது, தோள் மெலிந்த அவள் தோள் வளமுடைய தோழியைப் பார்க்கும்போது தன் நிலை நன்றாகத் தெரிகிறது. அந்தத் தோளையே சுட்டித் தோழியை அழைக்கிறாள், தடமென் பணைத் தோளி' என்று

"என்னைப் பிரிந்து சென்றவர் இன்னும் வரவில்லை; ஆனால் அவர் சொன்ன கார்காலம் வந்து விட்டது. அந்தக் காலத்தில் என்ன என்ன நடக்குமோ அவை நிகழ்கின்றன.' . . . .

கத்தாரோ வாரார் மடகடை மஞ்ஞை அகவக் கடல்முகந்து மின்னோடு வந்தது எழில்வானம்."