பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 தமிழ் நூல் அறிமுகம்

(மடநடை-மெத்தென்ற நடையையுடைய, அகவ. அகவிக் கொண்டு ஆட.1 .

"இவற்றை யெல்லாம் கண்டு வருந்துகிறேன் யான், இப்போது எப்படி இருக்கிறாய் என்று கேட்பவர் இல்லையே!' 3.

வந்து என்னை என் ஆதி.என்.பாரும் இல்.' (என் ஆதி என்ன ஆகிறாய், எப்படி இருக்கிறாய் என்பது கருத்து)

'என் காதலர் வரவில்லை, எனக்கு ஆறுதல் கூறுப வரும் இல்லை என்று சொல்லித் தலைவி துன்புறு கிறாள். -

"தடமென் பணைத்தோளி, கீத்தாரோ வாரார்;

மடகடை மஞ்சை அகவ-கடல்முகந்து மின்னோடு வந்தது எழில்வானம்; வந்துஎன்னை என்ஆதி!' என்பாரும் இல்.’ மருதத்திணை ஊடலைச் சொல்வது. தலைவன் பரத் தையின் உறவுடையவனாக இருக்கிறான்.தலைவிக்கு மகன் பிறந்திருக்கிறான். தலைவனிடம் தலைவிக்கு ஊடல் உண்டாகிறது. அதைத் தீர்ப்பதற்குப் பாட்டுப் பாடும் பாணன் தலைவனுடைய தூதாக வருகிறான், தலைவன் மிகவும் நல்லவன், குற்றம் இல்லாதவன் என்று சொல் கிறான். அதைக் கேட்டுக் கோபம் வருகிறது. தலைவிக்கு. எனக்குத் தெரியும் ஐயா. அவருடைய இயல்பு. பலரும் புகுந்து மூழ்கும் பொய்கையை உடைய ஊருக்குத் தலைவர் அவர், அவரும் அப்படித்தான். நீ வந்து அவருடைய பெருமைகளை இங்கே வந்து அளக்க வேண் டாம்' என்று தொடங்குகிறாள்.

பொய்கைால் ஊரன் திறம்கிளத்தல்.

(திறம்-திறமைகள். கிளத்தல்-சொல்லாதே.)