பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. ஐந்தினை எழுபது 201

நான் துன்பப்படுகிறேன் என்பது உண்மை. என்னு டைய துன்பங்கள் அவை, அவற்றைப் பற்றி உனக்கு என்ன கவலை? நீ எழுந்து போ; உன் புகழ் போதும்.'

  • ' என்னுடைய எவ்வம் எனினும் எழுந்தீக ' (எவ்வம்-துன்பம். எழுந்தீக எழுந்து போ.1

'நான் தனியே இருப்பதாக நீ எண்ண வேண்டாம், ஒவ்வொரு நாளும் எனக்கு நல்ல துணை இருக்கிறது. அந்தத் துணையும் ஓர் ஆடவன் தான். ஆனால் அவன் சிறிதும் குற்றம் இல்லாதவன். அவன் கையில் உள்ள பொன் வளை கையை வீசி ஆட்டும்போது ஆடும்; அவன் மழலைச் சொல்லைக் குழறிச் சொல்வான்; அவ்வாறு உள்ள என் மகன் சிறுவன், எனக்குத் துணையாக இருக் கிறான், நீ போ.'

- கைவல் மறுஇல் பொலந்தொடி வீசும், அலற்றும் சிறுவன் உடையேன் துணை.' X

மறு-குற்றம் கொடி-வளை மறு இல் சிறுவன். பொலந்தொடி வீசும் சிறுவன், அலற்றும் சிறுவன் என்று கூட்ட வேண்டும்.) -

'என் குழந்தைக்கு வளை முதலிய அணிகலன்களைப் பூட்டி அழகு பார்ப்பேன்; அவன் கையை வீசி ஆடும் போது அதைக் கண்டு களிப்பேன்; அவன் வாயிலிருந்து பிதற்றுவது போல வரும் மழலைச் சொற்களைக் கேட்டு இன்புறுவேன்; ஆகவே அவர் வரவில்லையே என்ற கவலை எனக்கு இல்லை” என்று சொல்லாமல் சொல்கிறாள். இதில் அவளுடைய கோபம் உள்ளுறப் புலப்படுகிறது.

இயற்கையை வருணிக்கிறார் புலவர். அங்கே உள்ள மந்தி பழத்தை நிறைய உண்டு விட்டுக் காட்டுப் பசுவின்