பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 தமிழ் நூல் அறிமுகம்

மடியைப் போய் வருடுகின்றதாம்; தன் கன்றுதான் வாய் வைக்கிறதென்று அந்தப் பசு பால் சுரக்கிறது, தேனிறால்கள் கீழே விழ அதைக் காட்டுப் பசு குளம்பால் துகைக்கிறது. -

முல்லை நிலத்தில் கொன்றைப்பூ நெருப்பைப் போலப் பூக்கிறது, முல்லை மலர் பல்லைப்போல அரும்பை ஈனுகிறது. பாலை நிலத்தில் வீழ்ந்த வீரர்களுக்குக் கல்நட்டு அவர்களுடைய வீரச்செயலை அதில் எழுதி வைக் கிறார்கள்.

இவ்வாறு இயற்கையைப் பற்றியும் பிறவற்றைப் பற்றியும் உள்ள வருணனைகளை அங்கங்கே இந்த நூலில் பார்க்கலாம். " .