பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. ിഞങ്ങാrഞ്ഞ நூற்றைம்பது

ஐந்து திணைக்கும் உரிய கருத்துக்களை நூற்றைம் :பது வெண்பாக்களால் வரிசையாக அமைத்துச் சொல் வ தால் திணைமாலை நூற்றை பது என்ற பெயர் படைத்த இந்நூலை இயற்றியவர் கணி மேதாவியார் என்னும் புலவர். நூற்றைம்பது என்று பெயர் அமைந்தாலும் இப் போது இந்நூலில் 153 பாடல்கள் உள்ளன. இந் நூலாசிரியரே பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள மற்றொரு நூலாகிய ஏலாதியை இயற்றியவர். அது நீதி நூல். இது காதல் நூல். -

கணி என்பது சோதிடரைக் குறிக்கும் சொல். இவ்வாசிரியர் சோதிட நூலில் வல்லவரென்று அந்தப் பெயரால் தெரிந்து கொள்ளலாம். ஏலாதியில் உள்ள கடவுள் வாழ்த்து இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களைத் துதிப்பதனால் இவர் சைனர் என்று தெரிய வருகிறது. இந்த நூலில் குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம்

என்ற வரிசையில் ஐந்து திணைகளும் அமைந்துள்ளன.

- பதினெண் - கீழ்க்கணக்கில் அகப் பொருளைச் சொல்லும் நூல்கள் ஆறு உள்ளன. அவற்றில் அதிகமான பாடல்களைக் கொண்ட நூல் இது.

இந்த நூலில் வரும் சில காட்சிகளைப் பார்க்கலாம்.

மலைச் சாரலில் சந்தன மரங்கள் வளர்ந்திருக் ஆகின்றன. அவை சோறு போடுமோ? மலையில் வாழும்