பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 . தமிழ் நூல் அறிமுகம்

மக்கள் அவற்றை வெட்டி அந்த நிலத்தைப் பண் படுத்தித், திணை விதைக்கிறார்கள். திணைப் பயிர் விளைகிறது; பூட்டை வாங்குகிறது. கதிரைக் கொத்தக் கிளிகளும் பறவைகளும் காத்திருக்கின்றன. அவற்றை ஒட்டித் திணைப்புனத்தைக் காப்பதற்காகக் கன்னிப் பெண்களைக் காவலாக வைக்கிறார்கள். சந்தன மரத்தை வெட்டிப் பரண் போட்டு அதன் மேல் அந்தப் பெண்களை இருக்கச் செய்கிறார்கள். அவர்கள் தம் கையில் கவணை ஏந்திக். கிளிகளை ஒட்டுகிறார்கள். அந்தக் கவணிலுள்ள கட்டையும் சந்தனந்தான். அதில் கவண் கல்லை வைத்து வீசும் போது சந்தன மணம் கமழ்கிறது.

இப்படி அந்த இளம் பெண் ஒரு பரணின் மேல் இருந்து கிளியை ஒட்டுகிறாள் அவள் கார் காலத்தைக் கண்டு களித்து ஆடும் மயிலைப் போல விளங்குகிறாள். அவள் குரல் கொடுத்து ஒட்டினால் தினையின்மேல் வந்து படியும் கிளிகள் பறந்து ஓடிவிடும்.

அவள் தினை காக்கும் பொழுதுதான் அந்தக். கட்டிளங் காளையைக் கண்டாள். இருவரும் களவுக் காதலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உறுதுணையாக அந்தப் பெண்ணின் தோழி இருந்தாள். -

இப்போது தினை முற்றி விட்டது. அதைக் காக்க வேண்டியதில்லை. அந்த இளம் பெண்ணின் தாய் அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவாள். வீட்டுக்கு. அழைத்துச் சென்று அங்கே இருக்கும்படி செய்வதை, 'இற்செறிப்பு' என்று சொல்வார்கள்.

"இனி மேல் இவளை வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவார்கள்' என்ற செய்தியைத் தோழி அந்த இளம். பெண்ணின் காதலனுக்குச் சொல்கிறாள். 'பகல் நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து அளவளாவிச் செல்லும்: