பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. திணைமாலை நூற்றைம்பது 205

காதலனைக் கண்டு தோழி, காதலியை வீட்டுக்கு அழைத்துப் போகும் செய்தியைச் சொல்வது' என்பது இந்தக் காதல் நாடகத்தில் ஒரு துறை. பகற்குறிக்கண் வந்த தலைமகனைக் கண்டு தோழி செறிப்பு அறிவு lஇயது' என்று அந்தத் துறையைச் சொல்வார்கள். அந்தத் துறையில் அமைந்த பாட்டு, குறிஞ்சித்திணையில் வருகிறது. -

'சந்தன மரத்தை வெட்டி உழுத மலைச் சாரலில் விளைந்த சிறிய தினைப் புனத்தில் சந்தன மரத்தை வெட்டிப் பண்ணிய பரணின்மேல் இருந்து, சந்தன. மணம் கமழக் கிளிகளை ஒட்டும் கார் மயில் போன்ற உன் காதலி குரல் கொடுக்க, கிளிகள் ஒலிபரப்பி இனி எழா' என்ற பொருளுடைய அப்பாட்டு வருமாறு.

சாக்தம் எறிந்து உழுத சாரல் சிறுதினை சாந்தம் எறிந்த இதண்மிசைச்- சாந்தம் கமழக் கிளிகடியும் கார்மயில் அன்னாள் இமிழக் கிளிஎழா ஆர்த்து' (சாந்தம்-சந்தனம். எறிந்த-வெட்டிய. இதண்-பரண். இமிழ-குரல் கொடுக்க.)

களவுக் காதல் செய்து இன்புறும் காதலனுக்கு, உன் காதலியை இனி மேல் திருமணம் செய்து கொண்டு வாழ்வாயாக!' என்று அறிவுறுத்த நினைக்கிறாள் தோழி. அதை வெளிப்படையாகச் சொல்லாமல், நீ இவ்வாறு வருவதை விட்டு விடு' என்று சொல்கிறாள், அவன் கடலும் கரையும் வளம் பெற்ற நெய்தல் நிலத்தலைவன். கடல் துறையை உடையவனைச் சேர்ப்பன் என்று சொல்வது வழக்கம். தோழி அவன் நாட்டுக் கடற்கரையில் நிகழும் இயற்கை நிகழ்ச்சியைச் சொல்கிறாள். -

கடற்கரையில் தாழை பூத்திருக்கிறது. தாழையின் மொட்டு முள் அடர்ந்த இலைகளுக்கு மேலே நீண்டிருக்