பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 தமிழ் நூல் அறிமுகம்

கிறது. எங்கும் மணம் பரவுகிறது கடற்கரையிலே வாழும் கொக்கு அங்கே வந்து அந்தத் தாழை மொட்டைப் பார்த்துத் தன் குஞ்சென்று எண்ணுகிறது. தான் வாயில் கவ்விக் கொண்டு வந்திருந்த மீனைத் தான் உண்ணாமல் அந்த மொட்டின்மேல் வைக்கிறது. வெயில் வீசுகிறது. தன் குஞ்சின் மேல் வெயில் படக்கூடாது என்ற எண்ணத்தால் அது மனம் உருகி அந்த வெயிலைத் தன் சிறகை விரித்து மறைக்கிறது. இத்தகைய கடற் கரையை உடையவனே, நீ இப்போது களவில் வருவது பல காலம் நிலைக்காது. இப்படி வருவதை மறந்து விடு' என்று தோழி சொல்கிறாள். -

'முருகுவாய் முள்தாழை நீள்முகை பார்ப்புஎன்றே

குருகுவாய்ப் பெய்திரை கொள்ளாது-உருகிமிக இன்னா வெயில்சிறகால்மறைக்கும் சேர்ப்ப! நீ மன்னா வரவு மற.' *

(முருகு-மணம். முகை-அரும்பு. பார்ப்பு-குஞ்சு.குருகுபறவை; இங்கே கொக்கு. சேர்ப்ப-கடற்கரைக்குத் தலைவனே. மன்னா வரவு-நிச்சயம் இல்லாமல் களவாக வரும் வருகை.)

இந்த இயற்கை வருண்னையைத் தோழி காரணம் இல்லாமல் சொல்லவில்லை. இதிலிருந்து ஒரு குறிப்பைத் தலைவன் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதைச் சொல்கிறாள். அந்தக் குருகு தன் குஞ்சைப் போலத் தோன்றுகின்ற தாழை அரும்பையே இரை பெய்து பாதுகாக்கும் நாட்டை உடைய நீ உன்னுடைய அன்புக்குரிய தலைவியையும் பிறர் மணம் புரிய முயல் வதற்கு முன் மணம் புரிந்து பாதுகாக்க வேண்டும்’ என்ற குறிப்பை இதனால் தெரிவித்தாள். இதை இறைச்சி என்று புல்வர் கூறுவர், - -

பொருளை ஈட்டும் பொருட்டுக் கணவன் வெளியூர் சென்றிருக்கிறான். அவன் பிரிவை ஆற்றமாட்டாமல்