பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. திணைமாலை நூற்றைம்பது 2ዑ¶

வருந்துகிறாள் மனைவி. அவளுடைய தோழி கணவர் வந்து விடுவார் என்று சொல்கிறாள்; "நல்ல சகுனம் உண்டாகிறது. என்னுடைய இடக்கண் துடிக்கிறது. ஆகையால் அவர் வந்து விடுவார்' என்கிறாள்.

'உருவவேல் ஒண்கண்ணாய்; ஒருகால்தேர்ச் செல்வன்

வெருவவீந்து உக்கள்ே அத்தம்-வருவர் சிறந்து பொருள்தருவான் சேட்சென்றார் இன்றே; இறந்துகண் ஆடும் இடம்." x|அழகிய வேலைப் போன்ற ஒளியைப் பெற்ற கண்ணை யுடைய பெண்ணே! என் இடப்பக்கக் கண் மிகுதியாகத் துடிக்கும்; ஆகையால் ஊக்கம் மிக்குப் பொருளை ஈட்டுவதற்காக நெடுந்து ரத்தில் உள்ள ஊருக்குச் சென்றலர் ஒற்றைச் சக்கரத்தை உடைய தேரைப் பெற்ற செல்வனாகிய கதிரவன் கோபித்து வெம்மை காட்டியதால் வளம் அழிந்து வீணான நீண்ட பாலை நில வழியைக் கடந்து இன்றே வருவார்.

1உருவம்-அழகு. ஒரு கால்-ஒற்றைச் சக்கரம். வெருவகடுமையாக வெயில் வீச. வீந்து-அழிந்து. அத்தம்-பாலை நில வழி. சேண்-நெடுந்துாரம். இறந்து-அளவுக்கு மிஞ்சி கண் இடம் ஆடும்.) -

இந்த நூலாசிரியர் சமணரானாலும் திருமால், பலராமன், முருகன் ஆகியவர்களைப் பற்றிய செய்திகளை உவமையாக எடுத்து ஆளுகிறார்.

திருமால் தன்மேல் வெள்ளைத் துகிலைப் போர்த்து நழுவ விட்டது போல, நீல நிறமுடைய மலையிலிருந்து அருவி இழிகிறது (6) என்பார்; கடலுக்கும் அதன் கரையிலுள்ள வெண் மணலுக்கும் திருமாலையும் பல

ராமரையும் உவம்ையாக்குவார் (58), இருட்டுக்குக் கண்ணனையும் நிலவுக்குப் பலராமரையும், உவமை கூறு வார் (96); சூரியன் திருமால் வீசிய சக்கரம் போலவும்