பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 தமிழ் நூல் அறிமுகம்

நிலா பலராமரைப் போலவும் இருக்கின்றனவாம். (97). மின்னலுக்கு முருகனுடைய வேலை ஒப்புக் கூறுவார் (93):

ஓரிடத்தில் காமன் கணையைச் சொல்கிறார் (8): இந்திரனை ஓரிடத்தில் குறிக்கிறார்(15).

இவர் சோதிடர் ஆகையால் நல்ல நாள் பார்த்துத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பல பாடல் களில் சொல்லியிருக்கிறார்.

"ஓர் நாள் வேட்டுத் தாழாது வந்தால்

நீ எய்தல் வாயால்' (46) (வாய்-நிச்சயம்.)

  • காள் ஆய்ந்து வரைதல் அறம் (52)

(வரைதல்-மணம் புரித்ல்.)

நாள் நாடி நல்குதல் நன்று,' (54)

இவர் இசையிலும் வல்லவர் என்று தெரிகிறது. பண், யாழ் முதலிய இசையோடு தொடர்புடையவற்றைப் பல இடங்களில் சொல்கிறார்.

சாதாரி, கந்தாரம், யாழ், துத்தம், செவ்வழி பாலையாழ், பண், பாட்டுஎன்பவற்றைஇவர் ஆளுகிறார்.

சங்க காலப் பாடல்களில் காணப்பெறாத சொல்லணி களை இந்நூலில் காணலாம். வேங்கையை, தீத்தீண்டு கையார் என்பார். தீத்தீண்டினால் வேகும், தீத்தீண்டுகை; வேம் கை, வேங்கை. மானிலம் மாண்ட துகில் உமிழ்வ தொத்தருவி, மானில மால்வரை நாடகேள்-மாநீலம்' என்று ஒரு தொடரையே வெவ்வேறு பொருளில் எடுத் தாளுவார். நாள் வேங்கை, கோள் வேங்கை, கடற்கோடு, அடற்கோடு என்பவை போல இரு பொருள் தரும் சொற். களுக்கு அடைதந்து குறிப்பிட்ட பொருளைப் புலப்படுத்த வைப்பார். ஒன்று முதலிய எண்கள் தொடர்ந்து: