பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. திணைமாலை நூற்றைம்பது 209

வருவதை எண் அலங்காரம் என்பர். இவ்வாசிரியர் அந்த அலங்காரம் வரும்படி பாடுகிறார்.

"ஒருகை இருமருப்பின் மும்மத மால்யானை' (78)

என்பதில் ஒன்று முதல் மூன்று வரையில் எண்ணணி வந்தது.

'ஐந்துருவின் வில்எழுதி காற்றிசைக்கும் முக்கீரை

இந்துருவின் மாந்தி இருங்கொண்மூ-முந்துருவின் ஒன்றாய்” (164)

என்பதில் ஐந்து முதல் ஒன்று வரையில் எண்கள் வந்தன.

மக்களிடையே உள்ள பல பழக்க வழக்கங்களை அங்கங்கே கூறுகிறார் ஆசிரியர்.

அழகான வெண்பாக்களால் ஆன இந்நூல் கற்பனை யினாலும் சொல்லாட்சியினாலும் பிற்கால நூல்களோடு ஒப்ப நிற்கிறது; கருத்துச் செறிவினாலும் அகப் பொருட் செய்திகளாலும் சங்க நூல்களின் நெறியைத் தழுவி நிற்கிறது.