பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. திணைமொழி ஐம்பது

'உன்னுடைய மலையில் ஒரு பெரிய பாட்டுக் கச்சேரியே நடந்து கொண்டிருக்கிறதாமே!" என்கிறாள், அந்த இளம் பெண். அவள் அவனுடைய காதலிக்கு உயிர்த் தோழி. .

'அப்படி ஒன்றும் இல்லையே!' என்கிறான் அந்தக் கட்டிளங்காளை.

எஇல்லை, இல்லை. உங்கள் மலைச்சாரல் ஊருக்குப் போய் வந்தவர்கள் சொல்கிறார்கள். யாழும் குழலும் முழவும் ஒரே சமயத்தில் இணைந்து ஒலிக்கும் அற்புத இசை இடைவிடாமல் கேட்குமாம், உங்கள் மலையில்.’

அந்த ஆணழகன் சற்றே சிந்தித்துப் பார்க்கிறான்; எனக்குத் தெரியாமல் அப்படி நடக்கிறதா, என்ன?” என்று கேட்கிறான். - -

ஆம். உங்கள் மலையிலிருந்து வீழும் அருவியில் இப்படி யெல்லாம் இனிய ஓசை கேட்கிறதாம். அந்த அருவிக்கு அருகில் நின்றிருந்தால் கண்ணுக்கினிய காட்சியைக் காணலாம். அதன் தண்மையில் உடம்பு இனிமை பெறும். யாழும் புல்லாங்குழலும் மிருதங்கமும் இணைந்து ஒலிக்கும் இன்னிசையைக் கேட்டுக் காது. தேன் பாய்ந்தது போன்ற இன்பத்தைப் பெறும். அருவியின் ஒரத்தில் வளர்ந்து மலர்ந்து மணக்கும் இன்பச்சாரலிலே