பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. திணைமொழி ஐம்பது 211.

நாசி அந்த நறுமணத்தை நுகர்ந்து இன்புறுமாம். அந்த அருவியின் நீர் தேனைப்போல இனிக்குமாம்.' *

"ஏது ஏது? எங்கள் ஊருக்கு வராமலே அதைப் பற்றிய வருணனையை ஒருகவிஞன் மாதிரிசொல்கிறாயே! அங்கே வந்து நேரில் பார்த்தால் உன்னுடைய கற்பனை வளாந்து ஓங்கி ஒரு காவியத்தையே உண்டு பண்ணி விடுமே!’

  • நான் தனியே வரமுடியுமா? என்னுடைய தோழி, உன்னுடைய ஆருயிர்க் காதலி, அங்கே வந்தால் நானும் வருவேன், நீதான் ஒவ்வோர் இரவும் இங்கே வந்துகொண் டிருக்கிறாய், அதனால் உங்களுக்கு இன்பம் உண்டாக நீ எண்ணுகிறாய்." -

தோழி ஏதோ பொடி வைத்துப் பேசுவது போலத் தெரிகிறது. "நீ என்ன சொல்கிறாய்? இன்பம் விளைவதாக எண்ணுகிறேனா? உண்மையில் இன்பம் உண்டாக வில்லையா?” -

'உன் காதலி வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்

டல்லவா உன்னைச் சந்திக்கிறாள்?"

"எனக்கு நீ சொல்வது விளங்கவில்லை.'

அவள் கண்ணின் அழகிலே நீ சொக்கிப் போகிறாயே!” - -

அதிலே என்ன ஐயம்! அவள் கண்கள் மாவடுவின் பிளப்பைப் போல எவ்வளவு அழகாக இருக்கின்றன! மாழை ஒண் கண் என்றால் அவள் கண்ணுக்குத்தான் தகும்.' -

அது மானின் கண்ணைப் போலவும் இருப்பதை நீ பார்த்திருக்கிறாயா?" .

ஆம்! மான் கண்ணைப் போல நீளமாக, அகலமாக இருக்கிறது.' - -