பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. தமிழ் நூல் அறிமுகம்

அது மட்டும் அல்ல. மான் கண் எப்போதும் சலித் துக்கொண்டே இருக்கும். அதில் அச்சச்குறி எப்போதும் இருக்கும்.’’ . -

அது போல-?’’ - ". என் தோழியின் கண்ணும் மருண்ட பார்வையுடன் இருக்கும்.'

ஏன்?" அவள் உள்ளத்தில் உள்ள அச்சந்தான் காரணம்." எதற்காக அச்சம்'

ஊராரெல்லாம் அவளைக் கண்டால் கிசு கிசு என்று ஏதேதோ பேசிக் சிரிக்கிறார்கள்.'

ஏன்?" 'இவள் யாரோ ஒருவனை இரவிலே சந்திக்கிறாள் என்று தமக்குள்ளே பேசிக் கொள்கிறார்கள்; பழிச்சொல் சொல்கிறார்கள். இந்தக் கெளவை, நாளுக்கு நாள் அதிக மாகப் பரவிக்கொண்டு வருகிறது.' சொன்னால் சொல்லட்டுமே!' *நீ ஆடவன். உன் ஊரிலிருந்து இரவில் வந்து விட்டுப் போகிறாய்.உனக்குப் பழிச் சொல்லின் கொடுமை தெரியாது. அவளோ பகலெல்லாம் ஊர்ப் பெண்கள் கண்முன் விழிக்க வேண்டியிருக்கிறது. எங்கே போனாலும் அவளைக் கண்டு தங்களுக்குள் கிசுகிசுக்கிறார்கள். அதனால் அவள் மிகவும் வருந்துகிறாள்.' х

அந்த இளைஞன் யோசிக்கிறான். இரவு நேரங்களில் வருவது தகாது என்று தோழி சொல்வது அவனுக்கு விளங்குகிறது. அவள் அவனை வரவே கூடாது என்று சொல்கிறாளா? சே! அப்படிச் சொல்வாளா? அவனுக்கும் அவன் காதலிக்கும் இடையே உள்ள காதலின் உரத்தை