பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. திணைமொழி ஐம்பது 213

நன்கு அறிந்தவளாயிற்றே, அந்தக் காதல் வளர உதவி செய்கிறவளும் அல்லவா? அப்படி இருக்க அவள் அவனை வரவேண்டாம் என்று சொல்வாளா? பின்னே, இரவு வந்தால் பழிச் சொல் பரவுகிறது என்கிறாளே; இதைச் 'சொல்ல என்ன காரணம்? அவன் யோசிக்கிறான்.

தோழியின் குறிப்பு அவனுக்குப் புலப்படுகிறது. அதை எவ்வளவு நயமாக அவள் குறிப்பிட்டிருக்கிறாள்! அவள் மலையைச் சொல்லும்போது, யாழும் குழலும் முழவும் இயைந்தாற் போல அருவி ஒலிக்கும் மலை நாடனே' என்று சொன்னாளே, அதில்தான் அவள் உளளக்கிடக்கையை நுட்பமாக அமைத்துக் காட்டி யிருக்கிறாள். இசைக் கருவிகள் இணைந்தாற் போல உன் மலையில் உள்ள அருவி ஒலிக்கிறதே அது போல நீயும் இவளும் இணைந்து வாழ்ந்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும். எல்லாரும் கேட்கும்படி அருவியின் ஒலி இசைக் கிறது போல நீயும் எல்லோரும் காணும்படி இவளைத் திருமணம் செய்து கொண்டால் உங்கள் வாழ்க்கை இன்னிசைபோல இருக்குமே!’ என்ற கருத்தைத் தோழி சொல்லாமல் சொல்லி விட்டாள். அந்தக் குறிப்பைத் தலைவன் உணர்ந்து கொள்கிறான். புன்முறுவலுடன் தோழியிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்படுகிறான்.

இனி அவன் திருமணத்துக்குரிய முயற்சிகளைச் செய்வான் என்பதில் என்ன சந்தேகம்?

இந்தக் குறிப்பை வைத்துத் தோழி சொல்லுவதாக அமைந்த பாடல் வருமாறு: - - -

யாழும் குழலும் முழவும் இயைக்தென விழும் அருவி விறல்மலை கன்னாட! ** மாழைமான் நோக்கியும் ஆற்றாள்; இரவரின் | satit அறி கெளவை தரும்.' 14-سوي