பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 4 தமிழ் நூல் அறிமுகம்

(யாழும் புல்லாங்குழலும் மிருதங்கமும் இயைந்து ஒலித்தாற்போன்ற ஒவியுடன் விழுகின்ற அருவியையுடைய வளத்தையுடைய மலைநாடனே, மாவடுவின் பிளப்பைப் போலவும் மானைப் போலவும் பார்வையையுடைய வளாகிய இவளும் நீ இரவு நேரத்தில் வந்தால், பொறுக்க மாட்டாள். ஊர் எல்லாம் அறியும் பழிச்சொல்லை உன் வரவு உண்டாக்கும்.) .

இயைந்தென . இயைந்தாலென. விறல் - வளம்,மலை நாடனாகிய தலைவனுக்குரிய அடையாகக் கொண்டு, வெற்றி மிடுக்கையுடைய மலைநாடனே என்றும் கொள்ளலாம்; அப்போது மலை நாடனென்பது அனைத்தும் ஒரு பெயராய்த் தலைவன் என்னும் துணையாய் நின்றதாகக் கொள்ளவேண்டும். மாழை - மாவடுவின் பிளப்பு. மாழைமான் . பொன்மான் என்றும் பொருள் கூறலாம். நோக்கியும் என்ற உம்மை, நானும் இந்தத் துன்பத்தைப் பொறேன் என்பதைச் சுட்டிய எச்ச உம்மை. ஆற்றாள் - பொறுக்க மாட்டாள். இரா என்றது இர என்று செய்யுளில் குறுகி நின்றது. கெளவை. பழிச் சொல்லால் உண்டான ஒலி. ஊர் - ஊரிலுள்ள பெண்கள்; ஆகுபெயர். இராவில் வந்தால் கெளவை தரும்; அதனால் ஆற்றாள். . தலைவனுடைய மலை நாட்டைச் சொல்லும்போது அருவியின் இயல்பைச் சொல்கிறாள். இசைக் கருவிகள் இணைந்து ஒலிக்கும் இன்னோசையையுடையது என் இறாள். உன்னுடைய நாட்டில் இசைக் கருவி இணைந்து ஒலிப்பது போன்ற இனிய ஓசையை எழுப்பும் அருவி இருக் இறது. அதுபோல நீயும் இணைந்து இன்பம் பெற வேண்டும் என்ற குறிப்பை அந்த வருணனைகள் உள்ளடக்கி யிருக்கிறது. இத்தகைய குறிப்பை அகப் பொருட் பாடல்களில் காணலாம். இதை இறைச்சி என்று சொல்வார்கள். சொல்லப்பட்ட பொருள்ைக் கொண்டு அதற்கு மேலும் ஒரு கருத்தை உள்ளடக்கிச் சொல்வது