பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. திணைமொழி ஐம்பது 215

இறைச்சி யாகும். இங்கே, யாழுங் குழலும் முழவும் இயைத்தென வீழும் அருவி' என்பது சொல்லப்பட்ட பொருள். இதனால், "நீயும் திருமணத்தால் இவளோடு இணைந்து வாழவேண்டும்' என்று அதற்கு மேல் ஒரு கருத்துப் புலனாகிறது.

இந்தப் பாடல், 'தோழி தலைமகனை இரவுக் குறி விலக்கி வரைவு கடாயது என்னும் துறையில் அமைந் தது. இரவு நேரத்தில் தாம் குறிப்பிட்ட இடத்தில் வந்து சந்தித்து அளவளாவும் தலைவனை, அவ்வாறு வருவதை விலக்கி, மணத்தைப் பற்றிய எண்ணத்தை அவன் மனத்தில் தோழி செலுத்தியது என்பது துறையின் பொருள்.

இந்தப் பாடல் பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்றாகிய திணை மொழி ஐம்பது என்பதில் குறிஞ்சித்திணைப் பாடல்களுள ஒன்றாக அமைந்திருக்கிறது. குறிஞ்சி; பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசையில் ஒவ்வொரு திணைக்கும் பத்துப் பத்துப் பாடல்களாக ஐம்பது பாடல்களைக் கொண்டது இந்த நூல். இதனை இயற்றியவர் கண்ணஞ் சேக்தனார். இவருடைய தந்தை யார் பெயர் சாத்தந்தையார்.

அங்கங்கே வரும் வருணனைகள் அழகாக அமைந் திருக்கும். அவற்றில் இயல்பானவையும் உண்டு; கற்பனை

மலைக் காட்டில் உள்ள சந்தன மரத்தை வெட்டி, அங்குள்ள புல்லை யெல்லாம் எரிக்கிறார்கள். மலை வாணர்கள் நிலத்தைப்பண்படுத்தி உழுவதற்காக இப்படிச் செய்கிறார்கள். எரித்தபோது புகை சூழ்கிறது. அப்போது மழை பொழிகிறது. அதைப் பார்த்தால் மலைவாணர் துாபம் போட அதைக் கண்டு மகிழ்ந்து தேவர்கள் மழைத்துளியைப் பெய்வது போல இருக்கிறதாம்.